தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் இடையே டீல் ஓகே … நாளை சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை …காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Nov 21, 2019, 8:03 PM IST
Highlights

மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து நாளை சிசேனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
 

மகாராஷ்ட்ரா மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணி கட்சிகள் இடையே முதலமைச்சர்  பதவி விஷயத்தில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் கடந்த 12-ந் தேதி அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர்  ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் எதிர் அணியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. சிவசேனாவுடன் கைகோர்ப்பது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பேசி வந்தாலும் இன்னும் இறுதி முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக மகாராஷ்ட்ராவில்  புதிய ஆட்சி அமைவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

மகாராஷ்ட்ராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 25 நாட்களை கடந்த போதிலும், அங்கு இன்னமும் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான்,  "கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். 

மேலும், சிவசேனா கட்சியுடனான பேச்சுவார்த்தை நாளை நடைபெறும்" என்று பிரிதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.

click me!