ரஜினிகாந்த் அரசியல் எண்ட்ரி கதம்... கதம்... கழுதை கார்ட்டூன் போட்டு உறுதி செய்த ஆடிட்டர் குருமூர்த்தி..!

By Thiraviaraj RMFirst Published Nov 3, 2020, 12:59 PM IST
Highlights

துக்ளக் இதழில் ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள கார்ட்டூன் ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்பதை ஆனித்தரமாக கூறியுள்ளது. 
 

துக்ளக் இதழில் ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள கார்ட்டூன் ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்பதை ஆனித்தரமாக கூறியுள்ளது. 

"தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்" என்று ரஜினி சொல்லவும், அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொரு நாளாக நேரில் சந்தித்து அவரிடம் பேசினர். முதலில் தமிழருவி மணியன் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி போஸ்கார்டன் வீட்டுக்கு சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக 2 பேரும் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. குருமூர்த்தி ஒருவேளை கட்சி ஆரம்பித்து, அதை திறன்பட செயல்படுத்த முடியாமல் போனால், இருக்கும் இமேஜும் மொத்தமாக சரிந்துவிடும் என்று ரஜினி சொன்னதாகவும், அதற்கு குருமூர்த்தியோ, அப்படியானால் அன்று எப்படி திமுகவுக்கு ரஜினி வாய்ஸ் தந்தீர்களோ அதுபோலவே இப்போதும் பாஜகவுக்கு வாய்ஸ் தாருங்கள் என்று கேட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது திமுகவுக்கு எதிராக வாய்ஸ் தாருங்கள் என்று கேட்டதற்கு, ரஜினி எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது துக்ளக் பத்திரிகையில் வெளிவந்துள்ள கார்டூன் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2 கழுதைகள் பேசி கொள்கின்றன. ஒரு நாளிதழில் முதல் பக்கச் செய்தியாக "ரஜினி கட்சி தொடங்குவது சந்தேகமே" என்று அச்சிடப்பட்டுள்ளது. அந்த தலைப்பை பார்த்துவிட்டு, ஒரு கழுதை இன்னொரு கழுதையுடம் "சரிவிடு.. இது உண்மையா இருந்தா நம்ம கூட்டத்தை சேர்ந்த ஒருத்தருடைய ஆட்சிதான் வரும்.. நமக்கு தீனிக்கு பஞ்சம் இருக்காது" என்று சொல்கிறது. 

இந்த கார்ட்டூன் இனி ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதை உணர்த்துவதாகவே அமைந்துள்ளது. ரஜினி தனது முடிவை குருமூர்த்தியிடம் திட்டவட்டமாக தெரிவித்ததால் தான் தான் வெறுத்து போய் இப்படி ஒரு கார்ட்டூனை குருமூர்த்தி பதிவிட்டுள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

click me!