வரைவு வாக்காளர் பட்டியல் பணிகள் தீவிரம்..!! புதிதாக 2 லட்சத்து 44 ஆயிரத்து 808 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Nov 3, 2020, 12:14 PM IST
Highlights

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது அதற்கு இன்றும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது 

வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 16ஆம் தேதி வெளியிடப்படவுள்ள நிலையில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2லட்சத்து 44 ஆயிரத்து  பேர் 808  விண்ணப்பித்துள்ளனர் என தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது அதற்கு இன்றும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியதாவது: 

கடந்த பிப்ரவரியில் இருந்து ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் 9லட்சத்து 48ஆயிரத்து 512 பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிதாக பெயர் சேர்க்க 2லட்சத்து 44 ஆயிரத்து  பேர் 808 விண்ணப் பித்துள்ளனர்.பெயர்களில் திருத்தம் செய்ய 4 லட்சத்து 88ஆயிரத்து 787பேரும், பெயர் நீக்கம் செய்ய 1 லட்சத்து 82ஆயிரத்து 886 பேரும் விண்ணப்பித்துள்ளனர். 

இதில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் வாக்குகளை அளிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யதுள்ளது அதன் அடிப்படையில் தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 9 லட்சத்து 22 ஆயிரத்து 166 பேர் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

 

click me!