திருநீற்றை கொட்டி அவமரியாதை... மன்னிப்பு கேட்கச் சொல்லி மு.க.ஸ்டாலினுக்கு இந்திய அளவில் அழுத்தம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 3, 2020, 12:01 PM IST
Highlights

தேவர் ஐயா அவர்களின் நினைவிடத்தில் கொடுக்கப்பட்ட திழுநீரை கீழே வீசுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்

தேவர் குரு பூஜைக்கு பசும்பொன் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு கொடுக்கப்பட்ட திருநீற்றை வாங்கி கழுத்தில் கொஞ்சம் தடவிக்கொண்டு, மீதத்தை கீழே போட்டு விட்டு சென்றார். இது வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

தேவர் திருமகனார் நினைவிடத்தில்,
திருநீறு பிரசாதத்தை அவமதித்து, தீண்டாமை கடைபிடித்த ஸ்டாலினை கண்டிக்கிறோம்!! pic.twitter.com/Qud0Rm30EF

— Mothilal (@BJPian2)

 

இந்நிலையில், இந்த விவகாரம் #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் என ட்விட்டரில் ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாகி வருகிறது. அதில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ’’மு.க.ஸ்டாலினை தேவர் ஜெயந்திக்கு யார் வர சொல்லி அழுதது? திருநீரை வாங்கி கழுத்தில் தடவிட்டு, கீழே தட்டிட்டு போகிறார். ஒவ்வொரு முறையும் ஸ்டாலினுக்கு விபூதியால் வரும் வினைகள்.!

https://t.co/3c66YHurdG

— Sarath ji 🇮🇳 (@viswa_sarath)

 

இந்த முறை இந்த விபூதிதான் திமுக தோல்விக்கு காரணமாக இருக்க போகிறது. குல்லா போட்டு கஞ்சி குடிச்சா பகுத்தறிவு, நெற்றியில் திருநீறு வைத்தால் மூடநம்பிக்கையா? தேவரின் திருக்கோவிலுக்குள் வந்து அவமரியாதை செய்த ஸ்டாலினே, உடனடியாக பசும்பொன் வந்து மன்னிப்பு கேள், இல்லையென்றால் நீ எங்கு சென்றாலும் உங்களையும் உங்கள் கூட்டணியினரையும் எதிர்ப்போம். தென் மாவட்டத்தில் நீ கால் பதிக்கவே முடியாது’’ என எதிப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்தச் செயலுக்கு மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

pic.twitter.com/fVOeoAXkBF

— முத்துக்குமார் (@ufu8dcq3pLIjSJL)

 

இந்நிலையில் #மன்னிப்பு_கேள்_ஸ்டாலின் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ’’முஸ்லிம் பண்டிகைகளுக்கு குல்லா அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கத் தெரிந்த திரு ஸ்டாலின் அவர்களே தேவர் ஐயா அவர்களின் நினைவிடத்தில் கொடுக்கப்பட்ட திழுநீரை கீழே வீசுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்’’ என ஸ்டாலினுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

pic.twitter.com/ImYEwZiZt6

— Soundrarajan Ganesapandian (@SoundrarajanGa1)

 

click me!