அதிமுக. திமுகவுக்கு தாவும் ரஜினி மக்கள் மன்றத்தினர்... கொத்து கொத்தா கட்சி மாறும் முன்னணி நிர்வாகிகள்

By sathish kFirst Published Jan 31, 2019, 8:44 PM IST
Highlights

ரஜினி குடும்பத்தினரின் பூர்வீகம்  கிராமமான நாச்சிக்குப்பம் பகுதியில் வசிக்கும், ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக இருப்பவர் மதியழகன். ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணாவின் சிபாரிசில் மாவட்டச் செயலாளரானார் மதியழகன்.  

மதியழகன் தொழில் அதிபராக இருக்கிறார். குறுகிய காலத்தில் அரசியலில் பிரபலமாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளவர். மன்றத்தை வளர்ப்பதில் தீவிர ஆர்வம் செலுத்திவந்திருக்கிறார். இதற்காக, நிறைய செலவும் செய்திருக்கிறார். ஆனால், ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள யாரும் தன்னை மதிப்பதில்லை என புலம்பி வந்த அவர் மிகுந்த மனவுளைச்சலில் இருந்துள்ளார், மக்கள் மன்றத்தினர் கிருஷ்ணகிரிக்கு வந்தால், மதியழகனை அழைக்காமல் இங்கிருக்கும் வேறொருவரை அழைத்துப் பேசுவார்களாம். 

இதனால், நொந்து போன மதியழகன். ரஜினி கட்சி ஆரம்பிப்பதில் கால தாமதம் செய்கிறார். தலைமை மன்றத்தின் முக்கிய பிரமுகர்களும் மதிப்பதில்லை என்ற காரணத்தால், அவர் அடுத்தகட்ட அரசியல் முடிவை எடுத்திருக்கிறார். தற்போது அவர் சென்னைக்கு வந்து ஸ்டாலின் தரப்பினரைச் சந்தித்துவிட்டுப்போயிருக்கிறார். 

மேலும் திமுக தரப்பில் கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று பதில் சொல்லப்பட்டதாம். இந்த விஷயம் ரஜினிக்கு காதுக்கு சென்றதாம், ஆனால் ரஜினியோ கொஞ்சமும் கவலைப்படாமல்"அவர் இஷ்டம்" என்று சொல்லிவிட்டாராம். 

இதனால், மதியழகன் திமுகவில் சேருவது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. அதேபோல, வடசென்னையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள். ரஜினி மன்றத்தில் நீண்டகாலமாக இருந்த ரசிகரின் மகன் மதன் என்பவர், சுமார் 2000 பூத் கமிட்டி உறுப்பினர்களைச் சேர்த்தவர்.

மதனின் வேகம் பிடிக்காத, வடசென்னை ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளராக இருக்கும் அந்த முக்கிய நபருக்கு பிடிக்கவில்லையாம். மதனை எதிர் கோஷ்டியாக நினைத்திருக்கிறார். இதன்  விளைவு, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான தனது பட்டாளத்தோடு,  துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக-வில் இணைந்துள்ளார். ரஜினி மன்றத்தில் பெரும்பாலும் ரஜினி கட்சியை ஆரம்பிப்பதாக தெரியவில்லை, இனியும் காலம் தாழ்த்துவது பலனில்லை என ஆளும் கட்சி, எதிர்கட்சிகளின் இணைய உள்ளார்களாம்.

click me!