ரஜினி என்றைக்குமே அவர்களோடு உறவு வைக்க மாட்டார்!

By Vishnu PriyaFirst Published Nov 20, 2019, 7:23 PM IST
Highlights

*    வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்‌ஷே தனது பொறுப்புகளை உணர்ந்து சிறப்பான ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகிறேன்! இந்த தேர்தல் முடிவுகள் மூலம் இலங்கையில் மக்கள் இன ரீதியாக இரண்டு பிரிவுகளாக இருப்பது உறுதியாக தெரிகிறது. அதாவ்து, நாட்டில் இனப்பிரச்னை மோசமாக இருக்கிறது என்று இந்த முடிவு உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. 
 

ரஜினி என்றைக்குமே அவர்களோடு உறவு வைக்க மாட்டார்!


*    வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்‌ஷே தனது பொறுப்புகளை உணர்ந்து சிறப்பான ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகிறேன்! இந்த தேர்தல் முடிவுகள் மூலம் இலங்கையில் மக்கள் இன ரீதியாக இரண்டு பிரிவுகளாக இருப்பது உறுதியாக தெரிகிறது. அதாவ்து, நாட்டில் இனப்பிரச்னை மோசமாக இருக்கிறது என்று இந்த முடிவு உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. 
-    க.வி.விக்னேஸ்வரன் (மாஜி வடக்கு மாகண முதல்வர்)

*    நாட்டின் வளர்ச்சிக்காக, சமூகப் பொருளாதார மாற்றங்களுக்காக இந்த சபை நிறைய செய்துள்ளது. ஆனால், முழுமையாக செய்துள்ளோமா என உங்கள் நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள். இந்த நேரத்தில் நாம் அனைவரும் சுய பரிசோதனை செய்ய வேண்டும். நம்மால் இன்னும் நிறைய பங்களிப்பை அளிக்க முடியும். 
-    வெங்கய்யா நாயுடு (ராஜ்யசபாவில்)

*    தமிழகத்தில் ஓடும் தண்ணீரை குடித்த அனைவரும் தமிழர்கள்தான். இதுவரை ஆண்டவர்கள், புதியவர்களுக்கு வழி விட வேண்டும். அந்தப் புதியவர்கள், போதுமென நினைக்கும்போது தம்பிமார்கள் ஆள வழி விட்டுச் செல்லுங்கள். 
-    எஸ்.ஏ.சந்திரசேகரன். 

*    இரண்டாண்டுகளுக்கு முன், தமிழக முதல்வர் பதவியில் அமர்வோம்! என இப்போதைய முதல்வர் இ.பி.எஸ். கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அவர் பதவிக்கு வந்ததும், நான்கு மாதங்களில் கவிழ்வார்! என்றனர். ஆனால் அதிசயம் நிகழ்ந்தது. நேற்றும் அதிசயம் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். 
-    ரஜினிகாந்த்

*    கருணாநிதியிடம் பிடிவாதம் பிடிக்கும் ஒரே மாவட்டச் செயலாளர் என்றால் அது வீரபாண்டி ஆறுமுகம் மட்டும்தான். கருணாநிதியின் தளபதிகளில், முன் நின்றவர் இவர். ‘கட்டப்பொம்மனுக்கு ஊமைத்துரை எனும் தம்பி போல் எனக்கு கிடைத்த தம்பி’ என்று கருணாநிதி இவரைப் பற்றிப் பெருமிதம் கொள்வார். 
-    மு.க.ஸ்டாலின்

*    இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் தம்பி கோத்தப்பய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். இது இலங்கை வரலாற்றில் மிக மோசமான நாள். அவருக்கு ஓட்டளிக்காத, இலங்கை தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோத்தப்பய ஆட்சியில் இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். 
-    வைகோ

*    கவர்னர் பதவி எனக்கு கிடைத்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். எல்லாவற்றிலும் முக்கிய காரணம், நான் தமிழகத்தை சேர்ந்தவள், தமிழ் மண்ணை சேர்ந்தவள் என்பதுதான். அதனால்தான் ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதெல்லாம் தாய்வீட்டுக்கு ஓடி வரும் குழந்தை போல் உணர்கிறேன். 

*    இசைக்கு மொழி கிடையாது. எனக்கு கன்னட மொழி சரளமாக பேச தெரியாது. என்றாலும், இசையறிவு இருந்ததால் கன்னடத்திலும் அருமையான பாடல்களை வழங்கியுள்ளேன். நடிகர் ராஜ்குமாரின் படங்கள் பலவற்றிற்கு இசையமைத்துள்ளேன். கன்னட மக்கள் அன்பால்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது.
-    இளையராஜா. 

*    தேசியமும், தெய்வீகமும் இணைந்ததுதான் நாடு. அத்தகைய அரசியல்தான், ஒரு நாட்டிற்கு தேவை. அது இல்லாவிட்டால் கழகங்களின் அரசியலாகவும், குடும்ப அரசியலாகவும், ஊழல் அரசியலாகவும்தான் இருக்கும். 
-    ஆடிட்டர் குருமூர்த்தி

*    அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத ஒரு ஆட்சியை ஏற்படுத்துவதுதான் எனது நோக்கம். அதற்காகத்தான் ரஜினியுடன் இணைந்துள்ளேன். அந்தக் கட்சிகளுடன் அவர் எந்த நேரத்திலும் உறவு வைக்க மாட்டார். அவ்வாறு வைத்தார் என்றால், அவருடன் நான் இருக்க மாட்டேன். 
-    தமிழருவி மணியன். 

click me!