எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது !! அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க ரஜினிகாந்த் அழைப்பு !!

By Selvanayagam PFirst Published Dec 19, 2019, 11:21 PM IST
Highlights

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் தேச பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்திய மக்கள் அனைவரும்  ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம் தலைநகர் டெல்லிக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பரவி உள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையும், அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை வீச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுக்க பல்வேறு நகரங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் இன்றும்  நடைபெற்றன.

கர்நாடக மாநிலம் மங்களூரில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 2 பொது மக்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதே போல் உத்தரபிரதேச மாநிலத்திலும்  பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்  தனது டுவிட்டர் பக்கத்தில்,  எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில், எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!