
ஒவ்வொரு தடவையும் அரசியலுக்கு வருவது குறித்து பொடி வைத்து பேசும் ரஜினிகாந்த், இந்த முறை நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்பதை உறுதியாக சொல்லி விட்டார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.
சில நாட்களுக்கு முன்பு, தமக்கு நெருக்கமான பெங்களுரு நண்பர் வீட்டின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.
திருமணம் முடிந்த பின்னர், தும்கூரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கிய ரஜினி, தமக்கு நெருக்கமான நண்பர்களுடன் கலந்து பேசி இருக்கிறார். அப்போது, இந்த முறை அரசியலுக்கு வருவது உறுதி என்று அவர் அடித்து கூறி இருக்கிறார்.
ரஜினி, தமது ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சியில் 5 நாட்கள் பங்கேற்ற போதே, அவரது அரசியல் பிரவேசம் உறுதி செய்யப்பட்டு விட்டது என்கின்றனர் அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.
அவர் தமது அரசியல் ஆசையை வெளிப்படுத்தவில்லை என்றாலும், அவருக்குள் அந்த ஆசை முளை விட்டு தழைக்க ஆரம்பித்து வெகு நாட்கள் ஆரம்பித்து விட்டன என்கின்றனர் அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.
அந்த அரசியல் ஆசை சக்ஸஸ் ஆகுமா? என்ற கவலைதான் அவருக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அதற்கான சூழல் வந்துவிட்டது என்று அவர் உறுதியாக நம்புகிறார்.
அவர் பெரிதாக மதித்த அரசியல் தலைவர் கருணாநிதி. அவர் ஆக்டிவாக இருக்கும் போது தாம், அரசியலுக்கு வரக்கூடாது என்று எண்ணினார்.
அதேபோல், ஜெயலலிதாவின் ஆளுமை மீது அவருக்கு எப்போதும் ஒரு தனி மதிப்பு உண்டு. அதனால், ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரையிலும் அவர் அரசியலுக்கு வர விரும்பவில்லை.
ஆனால், இன்று ஜெயலலிதாவும் இல்லை, கருணாநிதியும் ஆக்டிவாக இல்லை. அதனால் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார் என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்தும், அவரால் பெரிதாக எதையும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. அதனால், இவ்வளவு காலம் பொறுமை காத்த ரஜினிகாந்த், இப்போது அரசியலில் இறங்குவது சரியான தருணம் என்று எண்ணுகிறார்.
மேலும், இன்னொரு கட்சியில் சேர்ந்து அரசியல் செய்வதில் அவருக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. எனவே தனி கட்சி ஆரம்பிப்பதைதான் அவர் விரும்புகிறார் என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
எனவே, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் தமது முடிவை அறிவிப்பார் என்றே அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகின்றனர்.
இதை எல்லாம் ரஜினி தெளிவாக முடிவு செய்த பின்னரே, ரசிகர்களோடு புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியை தொடங்கினார் என்றே அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
கூடுமானவரை ஷங்கரின் 2 .௦ படத்திற்கு முன்பே ரஜினி தமது அரசியல் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.