ஆள்பலத்துடன் ஸ்டாலின்... எடப்பாடி கையில் குபேந்திரன் கஜானா... இருவரையும் அடியோடு அகற்ற ரஜினி சபதம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 12, 2020, 11:43 AM IST
Highlights

54 ஆண்டுகளாக இருந்துவந்த கட்சியை அகற்றுவதற்கு இதுதான் நேரம். இதை ஜனங்கள் யோசனை செய்ய வேண்டும். இது அரசியல் மாற்றத்திற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் நல்ல சந்தர்ப்பம் என ரஜினிகாந்த் பேசியுள்ளது அதிமுக- திமுக கட்சியினரை அதிர வைத்துள்ளது.
 

54 ஆண்டுகளாக இருந்துவந்த கட்சியை அகற்றுவதற்கு இதுதான் நேரம். இதை ஜனங்கள் யோசனை செய்ய வேண்டும். இது அரசியல் மாற்றத்திற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் நல்ல சந்தர்ப்பம் என ரஜினிகாந்த் பேசியுள்ளது அதிமுக- திமுக கட்சியினரை அதிர வைத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் வெளிப்படையாக சொல்வேன். எனக்கு ஒரு மாற்று அரசியல் கொண்டு வரவேண்டும். இங்கு ஒரு அரசியல் மாற்றம் வேண்டும். நல்ல தலைவர் வேண்டும். நல்ல தலைவர்களை கொண்டுவந்தால்தான் ஒரு நல்ல தலைவன் உருவாக்க வேண்டும்.  நான் மிகவும் மதிக்கிற பேரறிஞர் அண்ணா எத்தனை தலைவர்களை உண்டாக்கினார். தம்பி வா... தலைமை ஏற்க வா என்று அழைத்தார். அப்படி உருவாக்கின தலைவர்கள் தான் இதுவரை ஓடிக்கொண்டிருந்தார்கள். இப்ப யார் இருக்கிறார்கள்? எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்? சொல்லுங்கள்.

 இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு இன்னும் வரவில்லை. அவர்களை கொண்டு வரவேண்டும். நம் முன் இரண்டு கட்சிகள் இருக்கின்றன. அசுர பலத்துடன் கூடிய இரண்டு ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். ஒரு பக்கம் பார்த்தீர்களென்றால் 10 ஆண்டுகள் ஆட்சியில் கிடையாது. மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர் இப்போது இல்லை. அவரது வாரிசு நிரூபிக்க வேண்டும். அந்த நிர்ப்பந்தம் ஸ்டாலினுக்கு இருக்கிறது. வாழ்வா? சாவா? என்கிற நிர்பந்தம்.

பணபலம், ஆள்பலம், கட்டமைப்பு எந்த எல்லைக்கும் வேண்டும் என்றாலும் செல்வார்கள். அவர்களை சந்திக்க வேண்டும். இன்னொரு பக்கம் ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு அந்த குபேரனுடைய கஜானாவையே கையில் வைத்துக்கொண்டு கட்டமைப்பு மற்றொரு தரப்பு காத்திருக்கிறது. இவர்களுக்கு நடுவில் நாம் சினிமா புகழை வைத்துக்கொண்டு நம்ம ரசிகர்களை வைத்து கொண்டு ஜெயிக்க முடியுமா? இப்போ இந்த கொள்கைகளை சொன்னால் இந்தக் கொள்கையில் எடுபடவில்லை என்று சொன்னால், இவர்கள் எல்லாம் கொண்டுவந்து பலிகடா ஆக்கி விடவா? என்னை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை.

தேர்தல் என்பது சாதாரண விஷயமா? அதனால்தான் மக்களிடம் முதலிலே சொல்லி விடுகிறேன். இப்படி ஒரு பெரிய வெற்றிடம் இருக்கிறது என்று பெரிய ஆளுமை கிடையாது. மிகப்பெரிய டாக்டர் கலைஞர் அவர்கள் இன்னொரு ஆளுமையாக இருந்தார். திமுகவுக்கு 30% பேர் ஓட்டு போட்டார்கள் என்றால் 70% பேர் கருணாநிதிதான் போட்டார்கள். அதிமுகவில் 30% கட்சிக்காரர்கள் என்றால் 70% ஜெயலலிதாவிக்காக போட்டார்கள். இந்த ரெண்டு ஆளுமைகளும் இப்போது இல்லை. இதுதான் வெற்றிடம். 54 ஆண்டுகளாக இருந்துவந்த கட்சியை அகற்றுவதற்கு இதுதான் நேரம். இதை ஜனங்கள் யோசனை செய்ய வேண்டும். இது அரசியல் மாற்றத்திற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் நல்ல சந்தர்ப்பம். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார். 

click me!