பாஜகவின் அடையாளமாக முயற்சிக்கிறார் ரஜினி... திருமாவளவன் பதிலடி..!

By Thiraviaraj RMFirst Published Feb 5, 2020, 1:29 PM IST
Highlights

ரஜினியின் குரல் பாஜகவின் குரலாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

ரஜினியின் குரல் பாஜகவின் குரலாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,  ’’குடியுரிமை சட்டத்திருத்த மசோதா  இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகச் சிலர் பீதி கிளப்பிவிடுகின்றனர். இந்தியப் பிரிவினைவாத காலத்தில், சில இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என நினைத்து அங்கு சென்றார்கள். ஆனால், இங்கேயே இருக்கும் இஸ்லாமியர்கள், `இதுதான் நம் நாடு, நம் ஜென்ம பூமி, வாழ்ந்தாலும் செத்தாலும் இங்குதான்' என்று நினைத்து இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்? எனத் தெரிவித்து இருந்தார்.

 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘’அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பே ரஜினி தன்னை அடையாளப்படுத்தி கொள்ள முயற்சிக்கிறார். சிஏஏ குறித்த ரஜினியின் பேச்சு சங்பரிவாரின் குரலாகவே பார்க்கப்படுகிறது. சங் பரிவார் அமைப்புடன் இணைந்து செயல்படுவதை காட்டிக்கொள்ளவே திட்டமிட்டு அவர் பேசி வருகிறார். அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பே ரஜினி தன்னை பாஜக பக்தராக அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்’’என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 

click me!