போயஸ் வீட்டில் ரஜினிகாந்த் அதிரடி ஆலோசனை...இன்னும் இரண்டே தினங்களில் கட்சி அறிவிப்பு...கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்..

Published : May 23, 2019, 11:38 AM IST
போயஸ் வீட்டில் ரஜினிகாந்த் அதிரடி ஆலோசனை...இன்னும் இரண்டே தினங்களில் கட்சி அறிவிப்பு...கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்..

சுருக்கம்

முழு ஓய்வில் தனது வீட்டில் தேர்தல் நேரலைகளைப் பார்த்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது முக்கிய சகாக்களுடன் ஹாட் லைனில் தொடர்பில் உள்ளார் என்றும் அவரது கட்சி அறிவிப்பின் கவுண்ட் டவுட் ஸ்டார்ட் ஆகிவிட்டதாகவும் போயஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகள் அவ்வளவும் ரஜினியின் மனதுக்கு நெருக்கமாக அமைந்துள்ளன. மோடியின் வெற்றியை ரஜினி விரும்புவார் என்பது ஊர் அறிந்த ரகசியம். அதே போல் தமிழகத்தில் அதிமுகவின் கை இறங்கினால் தான் அரசியலில் இறங்கத் தோதுவாக இருக்கும் என்பது ரஜினியின் இன்னொரு விருப்பம். இவை இரண்டுமே இத்தேர்தலில் வெற்றிகரமாக நிறைவேறிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினி இன்று காலை தனது ரசிகர் மன்றத் தலைவர் ராஜூ மகாலிங்கம் உட்பட ஏகப்பட்ட வி.ஐ.பிக்களைச் சந்தித்து உடனடியாக செய்யவேண்டிய காரியங்கள் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

’தர்பார்’படத்துக்கு ரஜினி எடுத்துக்கொண்ட15 நாள் கேப் என்பது என்பது ரஜினியே கேட்டு வாங்கிக்கொண்டது என்றும் 23ம் தேதி தமிழக தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தனது மன்ற நிர்வாகிகள், ஆலோசகர்கள், மற்றும் தன் கட்சியில் இணையக் காத்திருக்கும் கல்வித் தந்தைகள் ஆகியோருடன் ஆலோசித்து ஒரு உறுதியான, இறுதியான முடிவை எடுக்க ரஜினி விரும்புகிறார் என்றும் நமது இணையதளத்தில் கடந்த வாரமே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தனது போயஸ்தோட்ட இல்லத்தில் கடந்தவாரம் ஏ.சி. சண்முகத்தை சந்தித்த ரஜினி அவருடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தனது அரசியல் எண்ட்ரி குறித்து ஆலோசித்தார்.அதன் தொடர்ச்சியாக சில மன்ற நிர்வாகிகளையும் சந்தித்த ரஜினி இன்னும் 48 மணி நேரத்துக்குள் உறுதியாக திட்டவட்டமாக தனது கட்சி அறிவிப்பை வெளியிடுவார்.

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!