அதிரடியாக களமிறங்கும் ரஜினி... கட்சியும் ரெடி... டி.வி.,யும் ரெடி... கட்சிப்பெயரும் தயார்..!

By Thiraviaraj RMFirst Published Nov 2, 2019, 3:38 PM IST
Highlights

இந்த தொல்லை, சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்கும்போது இல்லை.  சினிமா கடன் அரசியலில் தொடரக்கூடாது என்கிற ரஜினியின் ஜாக்கிரதை உணர்வும் அவருக்கு இருக்கிறது. 
 

படங்களில் ஒப்பந்தமாகி வந்தாலும் கட்சியின் கட்டமைப்பை சப்தமில்லாமல் ஸ்ட்ராங்காக அமைக்கும் பொறுப்பை தனக்கு நம்பிக்கையானவர்களிடம் ஒப்படைத்து விட்டு படப்பிடிப்புகளில் கலந்து கொண்டும், ஆன்மீக பயணம் மேற்கொண்டும் வருகிறார் ரஜினி.

கட்சிப்பணிகள் முன்பை விட ஆர்ப்பாட்டமின்றி வேகமெடுத்துள்ளன. கூட்டம் சேர்க்காமால் யாரை அழைத்து பேச வேண்டுமோ அவர்களுடன் சந்திப்பை நடத்தி வருகிறார்கள் ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகிகள். படப்பிடிப்புகளை முடித்ததும் ரஜினி வந்து தலைமை ஏற்பது மட்டுமே மிச்சம். அதற்கான அனைத்து வேலைகளையும் மன்ற நிர்வாகிகள் கன கச்சிதமாக செய்து வருவதாக கூறுகிறார்கள். 

சில நாட்களுக்கு முன் பொதுக்குழு உறுப்பினர்களாக 100 பேரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல. தங்களது கட்சியின் கொள்கைகளை, திட்டங்களை மக்களிடையே கொண்டுபோய் சேர்ப்பதற்காக சொந்தமாக ஒரு தொலைக்காட்சி சேனலை ஆரம்பிக்கும் பணியையும் முடுக்கி விட்டிருக்கிறாராம் ரஜினி. இந்தப்பணிகளில் இன்னும் ஓரிரு மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட உள்ளன. அதாவது கட்சியை அறிவிப்பதற்கு முன்பே டி.வி சேனல் இருக்க வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கிறாராம் ரஜினி.

இந்த சேனல் வேலைகளுக்கான அப்லிங்கை வழங்க ராஜ் டி.வி. நிர்வாகம் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கட்சிப்பெயரும் தமிழர் தேசிய கட்சி எனச் சூட்டப்பட்டுள்ளது. ஆகையால் இந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியினரை தனித்து 234 தொகுதிகளிலும் களமிறக்க ரஜினிகாந்த் முடிவெடுத்து விட்டார். இன்னும் சில மாதங்களில் கட்சியை தலைவர் அறிவித்து விடுவார் என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.   

அதனை உறுதி படுத்தும் வகையில் ரஜினி கட்சி தொடங்குவது உறுதி என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. ரஜினியின் பல்ஸ் தெரிந்த பலரும் இதைதான் சொல்லி வருகிறார்கள். இந்த நேரத்தில் ரஜினி இன்னும் எத்தனை படங்களில் நடிப்பாரோ, அது அவருக்குதான் தெரியும். ஆனால் கட்சி தொடங்கும் முன், தான் நடிக்கப் போகும் கடைசி படத்தை சன் பிக்சர்ஸ்தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ரஜினி. ஏன்?

அந்த நிறுவனம்தான் படத்தை சொந்தமாக வெளியிடுகிறது. மற்றவர்கள் விநியோகஸ்தர்களிடம் விற்கிறார்கள். படத்தை வாங்கியவர்கள் படம் வெளியாகி சில நாட்களில் ரஜினி வீட்டு வாசலில் நிற்கிறார்கள். இந்த தொல்லை, சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்கும்போது இல்லை.  சினிமா கடன் அரசியலில் தொடரக்கூடாது என்கிற ரஜினியின் ஜாக்கிரதை உணர்வும் அவருக்கு இருக்கிறது. 

click me!