
கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்கள் சந்திப்பில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அப்போது தன்னுடைய அரசியல் என்பது ஆன்மீக அரசியல் என்று கூறினார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடி வந்தாலும், அது என்ன ஆன்மீக அரசியல் என்று பலரும் குழம்பிய நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “ஆன்மீக அரசியல் குறித்து விளக்கம் அளித்த அவர், உண்மையான, நேர்மையான, நாணயமான, சாதி, மத சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மீக அரசியல். அரசியல் அல்லாமல் பார்த்தால், ஆன்மீகம் ஆத்மாவுடன் தொடர்புடையது” என விளக்கமளித்தார்.
பாபா முத்திரை கீழே தாமரை இருந்ததால், ரஜினிகாந்த் பா.ஜ.க-வை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், பாபா முத்திரையில் இருந்த தாமரை அதிரடியாக நீக்கப்பட்டது. முத்திரையின் கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்கிற வாசகங்கள் சரவணா ஸ்டோர் துணிக்கடை செல்வரத்தினம் அண்ணாச்சியின் லோகோவில் இருந்தது ஆனால் அதை நீக்கவில்லை, எனவே கட்சி தொடங்கும் முன் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினி. இதற்காக தனி இணையதளம் தொடங்கி, ரசிகர்களும் பொது மக்களும் உறுப்பினராகச் சேரும்படி அழைப்பு விடுத்தார்.
தற்போது, ரஜினி ரசிகர் மன்றம் என்ற பெயரையும் ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றினார். அடுத்தகட்ட நடவடிக்கையாக, கட்சியின் பெயர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடக்கும் நட்சத்திர களை விழாவில் பங்கேற்க மலேசிய சென்றுள்ள அவர் தமது மக்கள் மன்றம் இணையதளத்தில் எவ்வளவு பேர் இணைந்துள்ளனர் என நிகழ்ச்சி நடக்கும் வேலையில் தனது போனில் இருக்கும் செயலியை பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.