மாமல்லபுரம் கலைநிகழ்ச்சியில் ரஜினிக்கு அழைப்பு இல்லை..! செய்தி தொடர்பாளர் தகவல்..!

Published : Oct 10, 2019, 06:34 PM IST
மாமல்லபுரம் கலைநிகழ்ச்சியில் ரஜினிக்கு அழைப்பு இல்லை..! செய்தி தொடர்பாளர் தகவல்..!

சுருக்கம்

சீன அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை என்று செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

இரண்டு நாள் சுற்று பயணமாக நாளை பிற்பகல் ஒன்றரை மணியளவில் சென்னை வரும் சீன அதிபர் மாலை 4 மணி அளவில் மாமல்லபுரம் செல்கிறார். அங்கு அர்ஜுனன் தபசு பகுதியில் பிரதமர் மோடி சீன அதிபரை வரவேற்கிறார். அங்கு முக்கிய இடங்களை பார்வையிடும் அவர்கள் அதன்பிறகு கடற்கரை கோவிலுக்கு சென்று  அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளைக் காண உள்ளனர்.

இந்தநிலையில் மாமல்லபுரத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பபட்டதாக செய்தி வெளியாகியது. நாளை மாலை 6 மணி அளவில் கடற்கரை கோவிலில் நடைபெற இருக்கும் கலைநிகழ்ச்சிகளை இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பார்வையிட உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்திற்கும்  அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் அழைப்பு வந்திருப்பதை தொடர்ந்து அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் சீன அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை என்று செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். இது தொடர்பாக தவறான செய்திகள் பரபரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!