அன்புமணியை எல்லாம் தூக்கிவிட்டது யாரு? நன்றி மறக்காதீங்க ராமதாஸ்!: பா.ம.க.வை படுத்தி எடுக்கும் தி.மு.க.

By Vishnu PriyaFirst Published Oct 10, 2019, 6:33 PM IST
Highlights

மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்த தி.மு.க.வை ராமதாஸ் வம்புக்கு இழுக்க வேண்டாம். ‘உங்களின் சொந்த லாபத்துக்காக எங்களை அடகு வைத்தது போதும்.’ என்று வன்னிய மக்கள் என்றோ ராமதாஸை பிரிந்துவிட்டனர். ஏற்கனவே ராமதாஸின் பொருந்தா கூட்டணிக்கு தர்மபுரியில் வன்னியர் மக்கள் அடி கொடுத்துவிட்டது. மீண்டும் ஒரு அடி விக்கிரவாண்டி தொகுதியில் கிடைக்க இருக்கிறது. - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (மாஜி தி.மு.க. அமைச்சர்)

* வன்னியரின் ஓட்டுக்களை சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார் ஸ்டாலின். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் துரோகம் இழைத்தவர் கருணாநிதி. வன்னிய மக்களின் போராட்டத்தால்தான் இட ஒதுக்கீடு கிடைத்ததே தவிர, தி.மு.க. ஒன்றும் அதைப் பெற்றுத் தரவில்லை. - டாக்டர். ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)


* சீன அதிபர், இந்திய பிரதமரின் வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் மது கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நான்கு கடைகள், கிழக்கு கடறகரை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளில் உள்ள ஒன்பது மது கடைகள் ஆகியன வரும் 11 மற்றும் 12 தேதிகளில் மூடப்படும். -செய்தி.

*தமிழகத்தில் நடைபெற உள்ள விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதிகளின் சட்டசபை இடைத்தேர்தல்களில் வெற்றி பெற, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. -    எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

* தேசிய அளவில் உயர் கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை இருபத்தைந்து சதவீதமாகத்தான் உள்ளது. ஆனால், தமிழகத்தில் 48.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. - கே.ஏ.செங்கோட்டையன் (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்)

* மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டில் நடைபெறும் மத மோதல்கள், கலவரம், தாக்குதல்கள், படுகொலைகள், தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்களை பட்டியலிட்டு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் இந்தியாவின் மதிப்பு, உலகநாடுகள் மத்தியில் தாழ்ந்துவிடும். -    கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

* நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் போது, காரமராஜர் பெயரையும் பதிவு செய்து வருகிறார். குறிப்பாக, கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின்போது ‘காமராஜர் உயிருடன் இருந்திருந்தால் இந்த திட்டத்திற்காக என்னை பாராட்டியிருப்பார்.’ என்று மோடி கூறியதை நினைவு கூற வேண்டும். -    தமிழிசை (தெலங்கானா கவர்னர்)

* தென் மாவட்டங்களில், குறிப்பாக நாங்குநேரியில் பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் வலுவாக உள்ளன. அதனால்தான் அந்தத் தொகுதியில் நாங்கள் கண்டிப்பாக பிரசாரம் செய்ய வரவேண்டும்! என்று அ.தி.மு.க. வலியுறுத்தி சொல்லியுள்ளது. எங்களுக்கு அந்த தொகுதியில் நிறைய ஓட்டுக்கள் உள்ளன. அவை அ.தி.மு.க.வுக்கு விழும். -இல.கணேசன் (ராஜ்யசபா எம்.பி.)

* லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகியதால்தான் காங்கிரஸ் கட்சி தள்ளாடுகிறது. என்னதான் கட்சித் தலைவராக சோனியா பொறுப்பேற்றாலும், இடைக்கால ஏற்பாடு! எனும் மன நிலையிலேயே அவர் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலை கட்சிக்கு பின்னடவை உருவாக்குகிறது. -சல்மான் குர்ஷித் (காங்கிரஸ் மூத்த தலைவர்)

* ராகுலின் வெளிநாட்டு பயணத்தின் போது, சிறப்பு பாதுகாப்பு படையினர் உடன் செல்ல வேண்டும் என கூறுவது, அவருடைய தனிப்பட்ட அடிப்படை உரிமையை, சுதந்திரத்தை பாதிக்கும் செயல். மேலும், மத்திய அரசின் செயல், ராகுலின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் விதமாக உள்ளது. - மஜீத் மேமன் (தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர்)

*  மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்த தி.மு.க.வை ராமதாஸ் வம்புக்கு இழுக்க வேண்டாம். ‘உங்களின் சொந்த லாபத்துக்காக எங்களை அடகு வைத்தது போதும்.’ என்று வன்னிய மக்கள் என்றோ ராமதாஸை பிரிந்துவிட்டனர். ஏற்கனவே ராமதாஸின் பொருந்தா கூட்டணிக்கு தர்மபுரியில் வன்னியர் மக்கள் அடி கொடுத்துவிட்டது. மீண்டும் ஒரு அடி விக்கிரவாண்டி தொகுதியில் கிடைக்க இருக்கிறது. - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (மாஜி தி.மு.க. அமைச்சர்)

click me!