அரசியல் ஆட்டம் ஆரம்பம்...ஏ.சி. சண்முகத்துடன் அவசர ஆலோசனை நடத்திய ரஜினி...

Published : May 17, 2019, 04:49 PM ISTUpdated : May 17, 2019, 04:50 PM IST
அரசியல் ஆட்டம் ஆரம்பம்...ஏ.சி. சண்முகத்துடன் அவசர ஆலோசனை நடத்திய ரஜினி...

சுருக்கம்

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ரஜினி தனது திட்டவட்டமான முடிவை அறிவிப்பார் என்று நம்பகமான செய்திகள் நடமாடிவந்த நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும் தனது அரசியல் ஆலோசகருமான ஏ.சி. சண்முகத்தைச் சந்தித்துள்ளார்.

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ரஜினி தனது திட்டவட்டமான முடிவை அறிவிப்பார் என்று நம்பகமான செய்திகள் நடமாடிவந்த நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும் தனது அரசியல் ஆலோசகருமான ஏ.சி. சண்முகத்தைச் சந்தித்துள்ளார்.

‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில்; 35 நாட்கள் தொடர்ந்து நடந்து முடிந்த நிலையில் ரஜினி 3 தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.
அடுத்த ஓரிரு தினங்களிலேயே அவர் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,நேற்று
வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு இம்மாதம் 29ம் தேதி தொடங்குகிறது என்று தயாரிப்பு நிறுவனமான
லைகா அறிவித்துள்ளது.

இந்த 15 நாள் கேப் என்பது என்பது ரஜினியே கேட்டு வாங்கிக்கொண்டது என்றும் 23ம் தேதி தமிழக தேர்தல் முடிவுகள் வந்தவுடன்
தனது மன்ற நிர்வாகிகள், ஆலோசகர்கள், மற்றும் தன் கட்சியில் இணையக் காத்திருக்கும் கல்வித் தந்தைகள் ஆகியோருடன்
ஆலோசித்து ஒரு உறுதியான, இறுதியான முடிவை எடுக்க ரஜினி விரும்புகிறார் என்றும் நமது இணையதளத்தில் நேற்றே செய்தி வெளியிட்டோம்.

இந்நிலையில் தனது போயஸ்தோட்ட இல்லத்தில் இன்று நண்பகல் ஏ.சி. சண்முகத்தை சந்தித்த ரஜினி அவருடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தனது அரசியல் எண்ட்ரி குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில், அது பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், நேற்று ரஜினி காந்தை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த வரிசையில் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே தனது மன்ற நிர்வாகிகள் சிலரையும் ரஜினி தொடர்ச்சியாக சந்திக்கவிருப்பதாகத் தகவல்.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!