பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு! செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி! ரஜினியின் மவுனத்தின் பின்னால் இருக்கும் 1000 அர்த்தம்!

By Selva KathirFirst Published Oct 4, 2019, 1:36 PM IST
Highlights

பிரசாந்த் கிஷோரை சந்தித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட போது பதில் ஏதும் சொல்லாமல் ரஜினி சென்றதன் பின்னணியில் ஆயிரம் அர்த்தமாக இருப்பதாக பேச்சு எழுந்தது.

சட்டப்பேரவை தேர்தல் 2021ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டி என்று ரஜினி அறிவித்திருந்தார். இதனால் அடுத்த ஆண்டு ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய அளவில் பிரபலமான அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த கிஷோர் ரஜினியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.

மேலும் ரஜினி கட்சிக்கான பூர்வாங்க வேலைகளை பிரசாந்த் கிஷோர் டீம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பையில் தர்பார் படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் வழக்கம் போல் ரஜினியை சூழ்ந்தனர்.

தர்பார் படம் குறித்த கேள்விக்கு உற்சாகத்துடன் பதில் அளித்த ரஜினியிடம் தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. வழக்கமாக எந்த கேள்வி எழுப்பினாலு பதில் அளிக்க கூடியவ்ர ரஜினி. அட்லீஸ்ட் நோ கமென்ட்ஸ் என்றாவது கூறிவிட்டுதான் செல்வார். ஆனால் பிரசாந்த் குறித்த கேள்விக்கு ரஜினி எந்த பதிலும் அளிக்காமல் வேகமாக சென்று காரில் ஏறிக் கொண்டார்.

இதே போல் டிசம்பரில் கட்சி துவக்கமா என்கிற கேள்விக்கும் ரஜினி பதில் அளிக்கவில்லை. முன்பெல்லாம் இப்படி கேள்வி எழுந்தால் தேதியை குறித்துவிட்டு நான் சொல்கிறேன் என்று பதில் அளிப்பவர் ரஜினி. ஆனால் அந்த கேள்விக்கும் ரஜினி பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. இப்படி ரஜினி சைலன்ட் மோடுக்கு சென்றதற்கான காரணம் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பு உண்மை என்பதற்கு தான் என்கிறார்கள்.

மேலும் இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட முடிவை எடுக்காமல் எதுவும் பேச வேண்டாம் என்கிற பிரசாந்த் கிஷோரின் விருப்பத்திற்கு ஏற்ப ரஜினி இப்படி நடந்து கொண்டதாகவும் பேசுகிறார்கள். ஆக கராத்தே தியாகராஜன் சொன்னது போல் 6 மாதத்தில் ரஜினி கட்சி ஆரம்பித்துவிடுவார் போல.

click me!