ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகி உட்பட 4 மாவட்டச்செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.. குஷியில் ஸ்டாலின்.!

Published : Jan 17, 2021, 03:33 PM IST
ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகி உட்பட 4 மாவட்டச்செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.. குஷியில் ஸ்டாலின்.!

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும் அது குறித்த அறிவிப்பை 2020 டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினார். இதனையடுத்து, அரசியல் நிலைப்பாட்டில் இருந்து ரஜினி பின்வாங்கினார். 

இதுதொடர்பாக ரஜினி அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அதில், தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை. இவரின் அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில், தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தங்களது கட்சிக்கு ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்றும் பாஜக, அதிமுக கட்சிகள் கூறி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.இதன் விளைவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்,நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குஉள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் திமுகவில் இணைந்தார். ஸ்டாலின் என்பவர் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில்  சென்னை முகவரியில்  ரஜினி கட்சியை பதிவு செய்து வைத்ததாக தகவல் வெளியானது. 

PREV
click me!

Recommended Stories

Trisha: டீலே இதுதான்.! விராலிமலையில் த்ரிஷா போட்டி.?! வெற்றி கனியை தட்டி தருவதாக விஜயபாஸ்கர் உறுதி.!
EPS Meet Sasikala: சின்னம்மா ரிட்டன்ஸ்.! கட்சியை காப்பாற்ற சசிகலாவை சந்திகும் எடப்பாடி.?! மீண்டும் துளிர்க்கும் "இரட்டை இலை" என பறக்கும் மீம்ஸ்.!