
அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக ரஜினி அறிவித்துள்ள நிலையில் தன் முதல் அரசியல் பயணமாக தூத்துகுடி செல்கிறார் ரஜினிகாந்த இதற்காக காலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன். நடிகர் என்பதால் என்னை பார்த்தால் இந்த சூழலில் தூத்துக்குடி மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார். சட்டப்பேரவையை திமுக புறக்கணித்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை எனக்கூறினார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்
துப்பாக்கி சூட்டில் காயமுற்றவர்களை மக்களை காண ரஜினி அரசு மருத்துவமனையில் சந்தித்தார். ரஜினியுடன் செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டனர். அரசு மருத்துவமனைக்குள் ரசிகர்கள் யாரும் அத்துமீறி நுழையாமல் இருக்க ரஜினி மருத்துவமனைக்குள் வந்ததும் கதவை அடைத்தனர் காவல்துறையினர்.
காயமடைந்தவர்களில் மூன்று பேருக்கு தலா ரூ.10000 நிதி உதவி அளிக்கியுள்ளார். இறந்தவர்களின் வீடுகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வரவழைத்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவார் எனத் தெரிகிறது.
ரஜினிகாந்தின் முதல் அரசியல் பயணமான இந்த தூத்துக்குடி பயணம் காயமுற்ற மக்களுக்கு நிதியுதவி மற்றும் இறந்தவர்களின் குடும்ப சந்திப்பு என சரியாக செய்து வருகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்