
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று அரசியலுக்கு வருவது உறுதி... என்று அறிவித்தார் ரஜினி. மேலும், தனிக்கட்சிதான்... என்று அறிவித்தார் ரஜினி!
அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம்.
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்.
வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு நேரமில்லாததால் போட்டியில்லை
என்று அறிவித்தார் ரஜினி.
முன்னதாக, ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. கடந்த 6 நாளா ஆறாயிரம் பேர்.. தொந்தரவு இல்லாம கட்டுப்பாடு ஒழுக்கத்துடன் இருபப்து மகிழ்ச்சி. இந்தக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருந்தா போதும் சாதிக்கலாம் என்று கூறிய ரஜினி காந்த், காவல்துறை, ஊடகத்துறையினருக்கும் நன்றி என்று கூறினார்.
பின்னர், ரொம்ப பில்டப் ஆயிடுச்சில்ல என்று கூறி சிரித்தார் ரஜினி. பின், நான் பில்டப் கொடுக்கலை. தானா ஆயிடுச்சி. அரசியலைப் பார்த்து நான் பயப்படவில்லை. மீடியாவப் பாத்துதான் பயம் என்று கூறினார் ரஜினி.
ஊடகங்களைப் பார்த்து பெரிய பெரிய ஜாம்பவன்களெல்லாம் பயப்படுறாங்க. திணறுகிறாங்க. நான் குழந்தை. நான் எம்மாத்திரம்? என்று கூறி
டக்குனு மைக் போட்டு கேக்கறாங்க. நான் எதாவது சொல்ல அது பெரிய டிபேட் ஆகிடும்.
முந்தா நாள் நான் கார்ல ஏறப்போகும்போது, திடீர்னு மைக்க உட்டு, சார் உங்க கொள்கைகள் என்ன அப்டின்னு
என்ன கொள்கைகளா? 2 நிமிசம் தலை சுத்திடுச்சி... சின்னப் பசங்க.. வெரி நைஸ்.. வெரி நைஸ் என்றார் நகைச்சுவையுடன்!