
அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்.
வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு நேரமில்லாததால் போட்டியில்லை
என்று அறிவித்தார் ரஜினி.
முன்னதாக, ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. கடந்த 6 நாளா ஆறாயிரம் பேர்.. தொந்தரவு இல்லாம கட்டுப்பாடு ஒழுக்கத்துடன் இருபப்து மகிழ்ச்சி. இந்தக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருந்தா போதும் சாதிக்கலாம் என்று கூறிய ரஜினி காந்த், காவல்துறை, ஊடகத்துறையினருக்கும் நன்றி என்று கூறினார்.
பின்னர், ரொம்ப பில்டப் ஆயிடுச்சி. நானா பில்டப் கொடுக்கலை. தானா ஆயிடுச்சி. அரசியலைப் பார்த்து இல்லை, மீடியாவப் பாத்துதான் பயம் என்று கூறினார் ரஜினி.
உண்மை உழைப்பு உயர்வு இதுதான் தாரக மந்திரம்.
நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் இதுதான் நம்ம கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று கூறி முடித்தா ரனினி. ஆண்டவன் இருக்கான் என்றுகூறி முடித்தார்.