
நடிகர் ரஜினி காந்த், தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என்று இன்று ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள் ரசிகர்கள், மட்டுமல்ல நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சியினரும் ரஜினியின் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். ஊடகங்களிலும் ரஜினி ஃபீவர் தொற்றிக் கொண்டுள்ள நிலையில், டிவிட்டர் அரசியல் நடத்தி வந்த நடிகர் கமல்ஹாசன், ஒன்பது நாட்களுக்குப் பின்னர் இன்று காலை மீண்டும் ஒரு டிவிட் போட்டார். கண்ணா நானும் களத்துல இருக்கேன் என்று காட்டும் விதமாக அவர் போட்ட டிவிட் இதுதான்....
புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். புது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- என்று கூறியிருந்தார் கமல். வழக்கமான புத்தாண்டு வாழ்த்து தான் என்றாலும், இனியாவது நேர்மை பெருகட்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் கமல் என்பது குறிப்பிடத் தக்கது.