
இந்தியாவின் பிரதமராக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமர் ஆனால், அமெரிக்காபோல் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா மாறிவிடும் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
20 வருடங்களுக்கு மேலாக அரசியலுக்கு வருவார்... வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், ஒரு வழியாக கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி, தான் அரசியலுக்கு வந்து விட்டதாகவும், தனிக்கட்சி தொடங்கி வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். மேலும் ரசிகர்களையும், மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் ”ரஜினி மக்கள் மன்றம்” என்ற செயலியையும் தொடங்கி விறுவிறுப்பாக அரசியல் பணிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், சர்ச்சை புகழ் இயக்குநரான ராம்கோபால் வர்மா, ரஜினி குறித்து கூறியுள்ளார். அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமர் ஆனால், அமெரிக்காபோல் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா மாறிவிடும் என்று கூறியுள்ளார்.
இயக்குநர் ராம்கோபால் வர்மா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறும்படம் ஒன்றை எடுத்ததன் மூலம் சர்ச்சைக்கு ஆளானார். உச்ச நடிகர்கள் குறித்து ஏதாவது கூறி அடிக்கடி வம்பில் மாட்டிக் கொள்வார் ராம்கோபால் வர்மா. அந்த வகையில் தற்போது, நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் பிரதமர் ஆனால், அமெரிக்கா போல் இந்தியா மாறிவிடும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகில் உள்ள சுமார் 200 நாடுகளில் இந்தியாவின் வரிசை 2.0 இல் இருந்து 200.0 ஆக உயரும் என்று அதில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.