தமிழக பாஜக தலைவர் !! முதலமைச்சர் வேட்பாளர் … பாஜகவில் இணைய ரஜினிக்கு அமித்ஷா அழைப்பு !!

By Selvanayagam PFirst Published Aug 19, 2019, 9:08 AM IST
Highlights

தனிக்கட்சி  தொடங்குவதை விட, பாஜகவில்  சேர்ந்தால், நடிகர் ரஜினிக்கு, தமிழக, பாஜக தலைவர் பதவியும், முதலமைச்சர்  வேட்பாளர் பதவியும் தருவதாக, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியில், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், கர்நாடகாவில், முதலமைச்சராக இருந்த குமாரசாமியின் அரசு கலைக்கப்பட்டு, அங்கு, பாஜக அரசு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில்  தமிழகத்திலும், முதலமைச்சர்  மற்றும் மூத்த அமைச்சர்கள், வெளிநாடு செல்லும் போது, கறுப்பு பணம் பதுக்குவதற்கான பயணம் என்ற வதந்தியை கிளப்ப, திமுக ., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் எடப்பாடி பங்கேற்கும்  ஒவ்வொரு நிகழ்வையும் படம் பிடிக்க திமுக ஏற்பாடு செய்த வருவதாகவும் கூறப்படுகிறது.. இந்நிலையில், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, பலமான கூட்டணி அமைக்கவும், ரஜினியை, தமிழக, பா.ஜ., தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் அறிவிப்பதற்கான காய் நகர்த்தும் பணியை, அமித் ஷா துவக்கி உள்ளார்.

சென்னையில் நடந்த, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் வெளியீட்டு விழாவில், ரஜினி கலந்து கொண்டார். அதன் பின் அவரிடம் பேசிய அமித் ஷா பாஜகவில்  ரஜினி மக்கள் மன்றத்தை இணைத்து விடுங்கள். உங்களை, தமிழக பாஜக  தலைவராகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியிடம் பேசிய அமித்ஷா புதிதாக கட்சி தொடங்குவதற்கு பதில் பாஜகவில் இணைந்து விடலாம் என தெரிவித்தாகவும் கூற்பபடுகிறது.

click me!