வாக்களர் எண் - ஆதார் எண் இணைக்க தடுமாறும் தேர்தல் ஆணையம்... நாடாளுமன்றத்தில் அரசியல்வாதிகள் மனது வைத்தால் சாத்தியம்!

By Asianet TamilFirst Published Aug 19, 2019, 7:06 AM IST
Highlights

ரேஷன் கார்டு, பான் எண் போன்றவை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆதார் எண்களை வாக்காளர் எண்ணுடன் இணைத்தால், போலி வாக்காளர்களும் ஒழிவார்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்போரும்  பெயர்களும் நீக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்

வாக்களர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சட்டத்திருத்தம் கொண்டுவரும்படி மத்திய சட்ட ஆணையத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
 போலி வாக்காளர் பதிவுகளை ஒழிக்கவும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதை ஒழிக்கவும், கடந்த 2014-15ம் ஆண்டுவாக்கில் தேர்தல் ஆணையம் வாக்காளர் எண்ணுடன் இணைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பிட்ட சதவீத அளவு வாக்காளர் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதன்பிறகு வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் முடங்கின.


என்றபோதும், வாக்களர் எண்ணுடன் ஆதார் எண்களை இணைக்கும் முயற்சிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் எடுத்துவருகிறது. அதன் அடிப்படையில் தற்போது வாக்காளர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க சட்டம் கொண்டுவரும்படி மத்திய சட்ட ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

 
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், “வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர விண்ணப்பித்துள்ளவர்களின் விபரங்களை சரிபார்க்க ஆதார் எண் தேவைப்படுகிறது. இதேபோல வாக்காளர் பட்டியலிலிருந்து, போலி வாக்காளர்களை நீக்கவும் ஆதார் எண் தேவைப்படுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம், 2015-ம் ஆண்டில் ல் பிறப்பித்த ஓர் உத்தரவு அதற்கு தடையாக இருந்துவருகிறது. அந்தத் தடையை விலக்க வேண்டுமென்றால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்” என்று சட்ட ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது.


ரேஷன் கார்டு, பான் எண் போன்றவை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆதார் எண்களை வாக்காளர் எண்ணுடன் இணைத்தால், போலி வாக்காளர்களும் ஒழிவார்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்போரும்  பெயர்களும் நீக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். இதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டும்.

click me!