ரஜினிகாந்த் நண்பரின் மனைவி முன்னிலை !! சுயேட்சையாய் பட்டையக் கிளப்பும் சுமலதா !!

By Selvanayagam PFirst Published May 23, 2019, 6:46 PM IST
Highlights

கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ரஜினிகாந்தின் நண்பர் நடிகர் அம்பிரீசனின் மனைவி நடிகை சுமலதா, அவரை எதிர்த்து போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை விட  1 லட்சத்து 26 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
 

கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மறைந்த அம்பரீஷ் மனைவியான நடிகை சுமலதா நாடாளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் மாண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதலமைச்சர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

மாண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். இதனால் சுமலதாவிடம் வேறு தொகுதியில் போட்டியிடுமாறு சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தும் அதை சுமலதா ஏற்கவில்லை.

இதையடுத்து மாண்டியா தொகுதியில் சுமலதா சுயேட்சையாக களம் இறங்கினார். அவர் தனது மகனுடன் சென்று தொகுதி முழுக்க ஆதரவு திரட்டினார். 
இந்நிலையில் மாண்டியா தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி முன்னிலையில் இருந்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல, நடிகை சுமலதா முன்னிலை பெற்றார்.

தற்போது அவர் நிகில் குமாரசாமியைவிட, 1, 26, 436 வாக்குள் கூடுதலாகப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட அவரது வெற்றி உறுதியாகியுள்ளது. இந்த தொகுதியில் சுமலாதாவுக்கு பாஜக ஆதரவு அளித்தது குறிப்பிடத்ததக்கது.

click me!