"ரஜினியை அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார்?" - வீரலட்சுமியின் உருவ பொம்மையை எரித்த ரசிகர்கள்

Asianet News Tamil  
Published : May 22, 2017, 04:08 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
"ரஜினியை அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார்?" - வீரலட்சுமியின் உருவ பொம்மையை எரித்த ரசிகர்கள்

சுருக்கம்

rajini fans protest against veeralakshmi

ரஜினி அரசியலுக்கு வருவதை கண்டித்து, தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் இன்று காலையில் அவரது உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதை தொடர்ந்து பதிலடி கொடுக்கும்வகையில் ரஜினியின் ரசிகர்கள் தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமியின் உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்களை மாவட்டம் வாரியாக சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, அவர் விரைவில் அரசியலுக்கு வருவதாக பகிரங்கமாக தெரிவித்தார்.இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்துக்கு காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு போராட்டம், இலங்கை பிரச்சனை, முல்லை பெரியாறு, விவசாயிகள் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தலையை காட்டாத ரஜினி, தற்போது தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்குவதா? என சில அமைப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்தும் வருகின்றனர்.

இதனடிப்படையில், இந்நிலையில், தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், ரஜினியின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வீரலட்சுமி உள்பட ஏராளமானேரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் கடும் ஆக்ரோஷத்தில் இருந்த ரஜினியின் ரசிகர்கள் ஏராளமானோர் மதுரையில் திரண்டு வீரலட்சுமியின் உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது ரஜினிக்கு ஏராளாமான ரசிகர்கள் இருக்கிறோம், அவரை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் யார் என கேள்வி எழுப்பினர்.

பின்னர், தகவலறிந்து வந்த போலீசார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து செய்தனர். 

PREV
click me!

Recommended Stories

விஜய் கூட்டணிக்கு வேண்டாம்..! டெல்லியின் கணக்கை தவிடுபொடியாக்கும் எடப்பாடி..! அதிமுக-வின் 'மாஸ்டர் பிளான்'!
2011ல் விஜயகாந்த்.. 2026ல் பிரேமலதா.. திமுக கூட்டணியில் வைகோவுக்கு ஆப்பு வைத்த தேமுதிக..!