இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர்கள் ரஜினி காந்த், கமல்ஹாசன் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமைச்சராக பதவியேற்ற உதயநிதி
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தொடர்ந்து தகவல் பரவியது. ஆனால் 20 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் உதயநிதிக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவதே தனது லட்சியம்.தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் எனும் நான்.. கெத்தாக தமிழக அமைச்சராக பதவியேற்று கொண்டார்..!
அன்பு தம்பிக்கு வாழ்த்துகள்
இதனையடுத்து திரைப்படத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி கமல் தயாரிப்பில் , நான் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதாகவும், தற்போது நடித்து வரும் மாமன்னன் திரைப்படம் தான் என்னுடைய கடைசி திரைப்படம் என தெரிவித்தார். இந்தநிலையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்ற நிலையில் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth)3 தலைமுறை அனுபவம் உள்ளது
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி, அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள்.
வாழ்த்துகிறேன் தம்பி . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
— Kamal Haasan (@ikamalhaasan)
அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது என தெரிவித்துள்ளார். இதே போல பல்வேறு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
திரைப்படத்தில் இனி நடிக்க மாட்டேன்..! விமர்சனத்திற்கு எனது செயல்பாடு பதிலாக இருக்கும்- உதயநிதி உறுதி