சொத்துக்குவிப்பு வழக்கு.. அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகனின் பதவி தப்பியது.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumar  |  First Published Dec 14, 2022, 12:24 PM IST

தூத்துக்குடி முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி 1996-2001ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 31 லட்சம் ரூபாய் சொத்து குவித்தார். இந்த வழக்கில் அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜூவன் பெயரும்  சேர்க்கப்பட்டது. 


சமூக நலத்துறை அமைச்சராக உள்ள கீதா ஜீவன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி 1996-2001ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 31 லட்சம் ரூபாய் சொத்து குவித்தார். இந்த வழக்கில் அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜூவன் பெயரும்  சேர்க்கப்பட்டது. இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்.பெரியசாமி மீது முதன்மை குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 2-வது என்.பெரியசாமி மனைவி எபினேசர், 3-வது மகன் ராஜா, 4-வதாக தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், 5-வதாக அமைச்சர் கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், 6-வதாக கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- 28,000 சத்துணவு மையங்களை அரசு மூடுகிறதா ? கிடையவே கிடையாது.! எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலடி

தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி கடந்த 2017-ம் ஆண்டு காலமானார். அவரை தவிர குடும்பத்தினர் 5 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இவ்வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி கீதா ஜீவன் தாக்கல் செய்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்பின்னர் இவ்வழக்கு விசாரணைக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கீதா ஜீவன் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி குருமூர்த்தி வழங்கியுள்ளார். அதில், சொத்து வழக்கில் இருந்து அமைச்சர் கீதாஜீவன் அவரது கணவர், தாய், மேயர் ஜெகன் உட்பட 5 பேர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இதையும் படிங்க;-  பெண் அமைச்சர்களுக்கு திமுகவில் கொஞ்சம் கூட மரியாதை இல்லை.. திராவிட மாடலில் வெடி வைத்த கீதா ஜீவன்..

click me!