ரஜினி, அஜித், விஜய் இவங்கள்லாம் பெரியவங்களா..? பொங்கியெழும் சீமான்..!

By Thiraviaraj RMFirst Published Aug 26, 2019, 4:23 PM IST
Highlights

நான் 40 தொகுதிகளில் போட்டியிடுவதை பெட்டி செய்தியா கூட போடமாட்டேன் என்கிறார்கள். ஆனால், ரஜினி தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை தலைப்பு செய்தியாக போடுகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சித் லைவர் சீமான் பேசுகையில், ‘’பல பேருக்கு நம்மை பார்த்தால் இப்போது சிரிப்பாக இருக்கிறது. எல்லாம் கொஞ்ச காலம்தான். காலம் விரைவில் மாறும். கட்டளை இடும் இடத்திற்கு வருவோம்.

உலகத்தின் பேரறிஞர்களை உருவாக்கியவர்கள் நாங்கள். வள்ளுவனை தாண்டி இங்கே ஒருவரும் இல்லை. அவரை யாரும் அடித்துக் கொள்ள இன்றளவும் முடியவில்லை. கம்பன், இளங்கோவனை தாண்டி பாவலன் யாராவது உள்ளார்களா? இதை பற்றி யாராவது பேசுகிறார்களா என்றால் இல்லை. ரஜினி படத்தின் வசனத்தை மனப்பாடமாக பேசுவதா நமக்கு பெருமை? பிரபாகரன், ரஜினி, அஜித், விஜய் இதில் யார் பெரியவங்கனு கேளுங்க. சினிமா நடிகர்களின் பெயர்களைதான் கூறுவார்கள். கேளிக்கையில், கொண்டாட்டத்திலும் மூழ்கியுள்ள சமூகத்தை போராட்டத்திற்கு கொண்டுவருவது சிரமம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் நாம் அதனை சீர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எதற்கெடுத்தாலும் வளர்ச்சி, வளர்ச்சி என்று கூறும் நீங்கள் ஒரு தொகுதிக்கு தேர்தல் நடத்திவிட்டு எதற்காக 5 நாட்கள் காத்திருக்க வேண்டும். 5 ஆம் தேதி வாக்கு பதிவு முடிந்த உடனே, வாக்குகளை எண்ண வேண்டியதானே? அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. பதட்டத்திலேயே மக்களை வைத்து இருக்க வேண்டும். தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுறுவல் என்கிறார்கள். அவர்கள் எங்கே இருந்து வந்தார்கள்? எப்படி வந்தார்கள்? வானத்தில் இருந்தா வந்தார்கள்? அவர்கள் உள்ளே வரும் போது நீங்கள் என்ன செய்து கொண்டீருந்தீர்கள்.

வீட்டில் இருந்து திருடன் திருடிவிட்டு செல்லும்போது அவனை துரத்தி பிடிக்க அல்ல. வீட்டிற்கு வரும்போதே அவனை பிடித்து கொடுக்கதான். ஆனால், தீவிரவாதிகள் உள்ளே வருவார்களாம். அப்போது அமைதியாக இருந்துவிட்டு, பாமரனிடம் பர்ஸை எடு, பாக்கெட்டை காட்டு என்று அலம்புகிறார்கள். நாட்டில் உள்ள எவ்வளவோ பிரச்சனைகளை மடைமாற்ற இதை ஒரு வழியாக இப்போது பயன்படுத்துகிறார்கள். நான் 40 தொகுதிகளில் போட்டியிடுவதை பெட்டி செய்தியா கூட போடமாட்டேன் என்கிறார்கள். ஆனால், ரஜினி தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை தலைப்பு செய்தியாக போடுகிறார்கள். முட்டாளா இருக்கலாம். ஆனால் இந்த அளவு முட்டாளா இருக்க கூடாது" என அவர் தெரிவித்தார். 

click me!