அதிமுக- திமுகவை ஒருசேர கதறவிடும் ரஜினி... அரசியலை ஆரம்பிக்கும் முன்பே நெத்தியடி..!

By vinoth kumarFirst Published Jan 22, 2020, 1:19 PM IST
Highlights

ரஜினி தொடர்பான கருத்து பதிலளித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம் “என்னைப் போன்ற எளியவர்கள் கூட இந்த நிலைமைக்கு வரப் பெரியார் தான் காரணம். தந்தை பெரியாருடைய கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை, அவரின் கருத்துகள் குறித்துப் பேசும் போது முழுமையாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றார். 

என்னைப் போன்ற எளியவர்கள் கூட இந்த நிலைமைக்கு வரப் பெரியார் தான் காரணம். தந்தை பெரியாருடைய கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை, அவரின் கருத்துகள் குறித்துப் பேசும் போது முழுமையாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என துணைமுதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கில் சமீபத்தில் நடந்த துக்ளக் வார இதழின் பொன்விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பின்னர், விழா மேடையில் பேசிய அவர் 1971-ம் ஆண்டு சேலத்தில் நடந்த திக ஊர்வலத்தில் இந்து தெய்வங்களை நிர்வாணமாக எடுத்து வந்து செருப்பால் அடித்ததாக கூறியிருந்தார். இந்த பேரணிக்கு தந்தை பெரியார் தலைமை தாங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், முரசொலியைக் கையில் வைத்திருந்தால் திமுக என்றும், துக்ளக்கை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளி என்றார்.

ஆனால், அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. பெரியால் இந்து தெய்வங்களை நிர்வாணமாக எடுத்துவரவில்லை என மறுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்து ரஜினி பகிரங்கமாக மனிப்பு கேட்ட வேண்டும் என கூறியிருந்தார். ஆனால், ரஜினிகாந்த் நான் இல்லாதது எதையும் சொல்லவில்லை. 'அவுட்லுக்' என்ற பத்திரிகையில் வந்த செய்தியை தான் சொன்னேன். எனவே, மன்னிப்பு கேட்க முடியாது என்றார். ரஜினியின் இந்த விளக்கத்திற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். மறுபுறம் பெரியாருக்கு ஆதரவாக திமுக, அதிமுக தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ரஜினி தொடர்பான கருத்து பதிலளித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம் “என்னைப் போன்ற எளியவர்கள் கூட இந்த நிலைமைக்கு வரப் பெரியார் தான் காரணம். தந்தை பெரியாருடைய கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை, அவரின் கருத்துகள் குறித்துப் பேசும் போது முழுமையாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றார்.  பெரியாருக்கு எதிரான ரஜினியின் கருத்துக்கு ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் ஒன்று சேர்ந்தாலும் சற்று சளிக்காமல் மன்னிப்பு கேட்ட முடியாது என்று அவர் கூறியுள்ளார். அரசியலை ஆரம்பிக்கும் முன்பே ரஜினியின் நெத்தியடி பதிலை கண்டு ஆளும் தரப்பு அதிர்ந்து போயியுள்ளது.  

click me!