அண்ணாமலையை நம்பி பெங்களூருக்கு போன ராஜேந்திர பாலாஜி.. வசமாக சிக்கிட்டார்.. திகில் கிளப்பும் சவுக்கு சங்கர்.

Published : Jan 06, 2022, 11:56 AM IST
அண்ணாமலையை நம்பி பெங்களூருக்கு போன ராஜேந்திர பாலாஜி.. வசமாக சிக்கிட்டார்.. திகில் கிளப்பும் சவுக்கு சங்கர்.

சுருக்கம்

அதனால் தான் அவர் அந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதிமுகவினர் கூட ராஜேந்திரபாலாஜியை போலீஸ் தேடுவதை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். அவர்கள் கூட யாரும் ராஜேந்திர பாலாஜி நிரபராதி என கூறவில்லை, ஆனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டும் ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என்பதை விரைவில்  நிரூபிப்பார் என்று பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்தார்.  

முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி அண்ணாமலையை  நம்பி அசனுக்கு சென்றார், ஆனால் போலீசார் அவரை அங்கேயும் கைது செய்து விட்டனர் என ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் பகீர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் அசனுக்கு அருகிலுள்ள மாவட்டமான சிக்மங்களூர் மாவட்டத்தில்தன் தற்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல் அதிகாரியாக பணியாற்றினார். அதனால் அங்கு சென்றால்  தனக்கு உதவிகள் கிடைக்கும் என்று நம்பி ராஜேந்திர பாலாஜி அசனை தேர்ந்தெடுத்ததாகவும் அவர்  பகீர் கிளப்பியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே. டி ராஜேந்திர பாலாஜி, இவர்  அமைச்சராக இருந்தபோது தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆவின் உள்ளிட்ட பல அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட போலீஸாரிடம் புகார்கள் குவிந்தது. அந்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதனால் போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என்பதால் ராஜேந்திர பாலாஜி தனது வீட்டிலிருந்து தப்பி தலைமறைவானார். இந்நிலையில் போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அவர் கேரள மாநிலத்திற்கு தப்பி விட்டதாகவும் பிறகு பெங்களூரு சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக  மும்பைக்கு சென்று அங்கிருந்து டெல்லிக்கு சென்று பதுங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது.

அதனை அடுத்து விருதுநகர் போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை தேடி வந்தனர். குறிப்பாக கேரளா, கோவை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படையினர் முகாமிட்டு அவரை தேடி வந்தனர். ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் செல்போன்களும் ட்ராக் செய்யப்பட்டு வந்தது. அதேபோல் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி விடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ராஜேந்திரபாலாஜி தமிழக போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் நெடுஞ்சாலை அருகே இருக்கக்கூடிய அசன் என்ற பகுதியில் ராஜேந்திர பாலாஜி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அசன் சுங்கசாவடி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்ததில் அவர் காரில் பயணிப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அந்த பகுதியில் போலீசார் முகாமிட்டு காத்திருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்றில் அவர் தப்பிக்க முயற்சித்த போது  தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த காரில் பயணித்த அவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் குறிப்பாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராமகிருஷ்ணன் ராஜேந்திர பாலாஜிக்கு உதவியது தெரிய வந்தது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவரது கைது படலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. போலீசாரும் ராஜேந்திரபாலாஜிக்கு யாரெல்லாம் உதவினார்கள், எங்கெல்லாம் அவர் தங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான  சவுக்கு சங்கர், ராஜேந்திரபாலாஜி  தப்பிக்க ஏன் கர்நாடக மாநிலத்தை தேர்வு செய்தார் என்பது குறித்து பகீர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது:- ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த வரை  தீவிர பாஜக ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக பேசிவந்தார்.  ஹரித்துவாரில் நடந்த சன்சத் மாநாட்டில் பேசியவர்களை காட்டிலும் அவரது பேச்சுக்கள் வன்முறை நிறைந்ததாக இருந்தது. இந்ந நிலையில்தான் அவர் தப்பிப்பதற்கு அதிமுகவினரை காட்டிலும் பாஜகவினர் இவருக்கு உதவி செய்துள்ளனர்.

குறிப்பாக கிருஷ்ணகிரி பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் இவருக்கு பெரிய அளவில் உதவி செய்திருக்கிறார். அவருடையே திட்டப்படி பாஜக ஆளுகிற மாநிலமான பெங்களூருக்கு தப்பிக்க ராமகிருஷ்ணன் ஐடியா கொடுத்துள்ளார். அதிலும் கர்நாடக மாநிலத்தில் தமிழக போலீஸ் செல்ல முடியாத வகையில் பல வனப்பகுதிகள் நிறைந்த மாவட்டங்களுக்கு சென்று விட்டால் தப்பிக்கலாம்  என்று முடிவு செய்துள்ளனர். அதில் ஒன்றுதான் அசன் மாவட்டம், ஒக்கேனகலில் இருந்து அசனுக்கு சுமார் 300 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும், எத்தனையோ மாவட்டங்கள் இருந்தும் அசன் பகுதியில் தலைமறைவாவதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது அசன் மாவட்டத்திற்கு அருகிலுள்ள சிக்மங்களூர் மாவட்டத்தில்தான் தற்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல் அதிகாரியாக பணியாற்றினார். இதனால்தான் ராஜேந்திரபாலாஜி அங்கு சென்றார். அந்த மாவட்டத்திற்கு சென்றால் தனக்கு உதவி கிடைக்கும் என அந்த இடத்தை தேர்வு செய்துள்ளார். ஏனென்றால் அந்த மாவட்டங்கள் அண்ணாமலைக்கு மிகுந்த செல்வாக்கு நிறைந்த மாவட்டங்களாகும்.

அதனால் தான் அவர் அந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதிமுகவினர் கூட ராஜேந்திரபாலாஜியை போலீஸ் தேடுவதை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். அவர்கள் கூட யாரும் ராஜேந்திர பாலாஜி நிரபராதி என கூறவில்லை, ஆனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டும் ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என்பதை விரைவில்  நிரூபிப்பார் என்று பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்தார். ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அது உண்மையா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம்தான். இதை ஒரு பாமரன் அறிவான் ஆனால் 7, 8 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலைக்கும் இது  நன்றாகவே தெரியும்.  அப்படி இருந்தும் ஒரு குற்றச்சாட்டில் தேடப்படும் ஒருவருக்கு எப்படி இவர், விரைவில் அவர் குற்றமற்றவர் என நிரூபிப்பார் என்று பேச முடியும். எனவே இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது சந்தேகமாக இருக்கிறது என சவுக்கு சங்கர் கூறியுள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!