பிழைப்புக்காக பேசியிருப்பார் ராஜேந்திர பாலாஜி... - பொன்னார் கிண்டல்...

 
Published : Oct 21, 2017, 06:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
பிழைப்புக்காக பேசியிருப்பார் ராஜேந்திர பாலாஜி... - பொன்னார் கிண்டல்...

சுருக்கம்

Rajendra Balaji talked about the existence of their lives saying that the AIADMK can not be moved until Modi becomes prime minister says Ponadiran.

மோடி பிரதமராக இருக்கும் வரை அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது தங்களது பிழைப்புக்காக கூறியிருப்பார் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை அமைச்சர்கள் யாரும் வாய்த்திறக்காமல் மவுனம் காத்து வந்தனர். 

அந்த அளவிற்கு அமைச்சரகளை மவுனம் காக்க வைத்து கட்டி காத்து வந்தார் ஜெயலலிதா. ஆனால் தற்போது முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. 

அதனால் அமைச்சர்கள் தங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் கொட்டி தீர்த்து வருகின்றனர். ஏற்கனவே மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு சப்பை கட்டுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில், பெரியகுளத்தில் நடக்கும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, அதிமுக-வுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பிரதமர்  மோடி பார்த்துக்கொள்வார் என்றும் மோடி இருக்கும் வரை நம்மை யாரும் மிரட்ட முடியாது என்றும்  தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த பொன். ராதாகிருஷ்ணன் மோடி பிரதமராக இருக்கும் வரை அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது தங்களது பிழைப்புக்காக கூறியிருப்பார் என தெரிவித்தார். 

மேலும், தமிழக அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துகள் குறித்து அவர்களிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!