தயிர்வடை வைத்து கும்பிட்ட ராசாத்தி, கனிமொழி !! முடிந்துபோன பகுத்தறிவு !!

By Selvanayagam PFirst Published Sep 7, 2018, 7:52 AM IST
Highlights

மறைந்த கருணாநிதிக்கு பிடித்தமான தயிர்வடையை அவரது சமாதியில் வைத்து அவரது துணைவி ராசாத்தி அம்மாவும், கனிமொழி எம்.பி.யும் மலர்தூவி வணங்கினர். இந்த நிகழ்வு பகுத்தறிவுக்கு ஏற்றதாக இல்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த மாதம் 7 ஆம் தேதி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் பெரும் சட்டப் போராட்டத்துக்குப் பின் அண்ணா சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி மறைந்த 3 ஆவது நாளில் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சாதாரணமாக இந்து குடும்பங்களில் மறைந்தவருக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டன. பகுதிதறிவுவாதி, கடவுள் மறுப்புக் கொள்கை போன்றவற்றில் தீவிர பற்றுடைய கருணாநிதியின் வீட்டிலா இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன என பலரும் ஆச்சரியப்பட்டனர். பலர் அதை கிண்டல் செய்தனர்.

இதே  போன்று கருணாநிதி மற்நத 30 ஆவது நாளான நேற்று முன்தினம் அழகிரி கருணாநிதி சமாதிக்கு சென்று வணங்கினார். ஸ்டாலின் குடும்பத்தினரும் 30 ஆவது நாள் சடங்குகளை செய்தனர்.

இதற்கொல்லாம் ஒரு படி மேலே சென்று வியப்பை ஏற்படுத்தியது நேற்று மாலை நடந்த ஒரு நிகழ்வுதான். மாலை திடீரென கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாவும், கனிமொழியும் அவர் சமாதிக்கு வந்தனர்.

அப்போதுஇ மறைந்த  கருணாநிதிக்கு பிடித்தமான தயிர் வடையை அவரது சமாதியில் வைத்து இருவரும் வணங்கினர். பின்னர் இருவரும்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடவுள் மறுப்புக் கொள்கை  மற்றும் பகுத்தறிவு போன்றவற்றை கருணாநிதி கடைசிவரை உறுதியாக பின்பற்றி வந்தவர். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு நடைபெறும் சம்பவங்கள் அனைத்து பகுத்தறிவுக்கு எதிராகவே நடந்த வருகின்றன. என பகுத்தறிவுவாதிகளும் , நெட்சன்களும் கிண்டல் செய்து வருகின்றனர். பகுத்தறிவு கொள்கைஎன்பது கருணாநிதியுடன் முடிந்து போய்விட்டதா ? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

click me!