ராஜஸ்தான்: மீண்டும் இணைந்த கைகள்.. அசோக்கெலாட் சச்சின் பைலட்.. வலுவான மெஜாரிட்டியில் காங்கிரஸ்.!!

By T BalamurukanFirst Published Aug 14, 2020, 9:09 AM IST
Highlights

ராஜஸ்தானில்  ஆட்சி செய்து வரும் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது.காங்கிரஸ் கட்சிக்கு போதிய அளவு ஆதரவு எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் பாஜக கொண்டுவந்திருக்கும் வாக்கெடுப்பு என்னவாகும்? என்பது இன்று தெரியும். 
 

ராஜஸ்தானில்  ஆட்சி செய்து வரும் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது.காங்கிரஸ் கட்சிக்கு போதிய அளவு ஆதரவு எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் பாஜக கொண்டுவந்திருக்கும் வாக்கெடுப்பு என்னவாகும்? என்பது இன்று தெரியும். 

ராஜஸ்தான் மாநிலம் 200 சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியது.இதில் 125 எம்எல்ஏக்கள் யார் கையில் இருக்கிறதோ அவர்களே அம்மாநில முதல்வர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.அம்மாநில முதல்வராக அசோக்கெலாட் இருந்துவருகிறார். துணைமுதல்வராக இருந்த சச்சின் பைலட் கட்சிக்குள் ஏற்ப்பட்ட மனக்கசப்பால் தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 18பேருடன் வெளியேறினார். இவர் முதல்வர் கனவில் வெளியேறியதால் பாஜக இவரை கையில் எடுத்து ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தது. ஆனால் அவர்களின் முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. மாநிலத்தை விட்டு வெளியேறி தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்கவைத்தார் சச்சின்.

 காங்கிரஸ் மேலிடம் சச்சின் செயல்பாடுகளால் கோபமடைந்தது.இதனால்தான் டெல்லி சென்று சோனியா ராகுல்காந்தி ஆகியோரை சந்திக்க சச்சின் சென்றபோது அவரை சந்திக்க மறுத்து விட்டார்கள்.இந்த சூழ்நிலையில் மாயாவதி கட்சியை சேர்ந்த 6எம்எல்ஏக்கள் அசோக்கெலாட்க்கு ஆதரவாக மாறினர். இதைக்கண்டித்து ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் சச்சின்பைலட் காங்கிரஸ்க்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறார்.
இதனால் காங்கிரஸ் ஆட்சி ராஜஸ்தானில் மீண்டும் பலமடைந்துள்ளது. 

சச்சினுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா? மாநில தலைவர் பதவி வழங்கப்படுமா? என்று தெரியவில்லை. இந்த நிலையில் மீண்டும் இணைந்த கைகளாக இருவரும் இணைந்திருக்கிறார்கள்.ஜெய்பூரில்  பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. 

பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறும் போது, “ ராஜஸ்தானில் சட்டப்பேரவை  இன்று கூடுகிறது. அன்றைய தினமே, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்” என்றார். 

 சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனது அரசுக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளார்.  அதிருப்தியில் இருந்த சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீண்டும்  சமரசம் அடைந்துள்ளதால், அசோக் கெலாட்டிற்கு பெரும்பான்மை காட்டுவதில் எந்த சிக்கலும் இருக்காது. சச்சின் பிரச்சனைகள் அனைத்தும் காங்கிரஸ் சரிசெய்வதாக உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.


 

click me!