பாடம் கற்காத ராகுல்... இலக்கியம் எடுத்துரைக்கும் மோடி... நாராயணா இது உனக்கே அடுக்குமா..?

By Thiraviaraj RMFirst Published Feb 25, 2021, 3:16 PM IST
Highlights

பிரதமர் மோடி தமிழில் பேசி பல மேடைகளில் திருக்குறள், திருவாசகம், பழம்பெரும் நூல்கள், இலக்கியங்களை பல மேடைகளில் சுட்டிக் காட்டி தனது உரையில் உட்புகுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். காரணம் அவருக்கு தமிழ் மொழி மீது அதீதப்பற்று உண்டு எனக்கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தமிழில் பேசி பல மேடைகளில் திருக்குறள், திருவாசகம், பழம்பெரும் நூல்கள், இலக்கியங்களை பல மேடைகளில் சுட்டிக் காட்டி தனது உரையில் உட்புகுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். காரணம் அவருக்கு தமிழ் மொழி மீது அதீதப்பற்று உண்டு எனக்கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரி வந்தபோதும், மோடியின் இன்றைய வருகையின் போதும் இர்வருகுமான தமிழ்ப்பற்று வெடவெளிச்சமாகி உள்ளது. சில நாட்களுக்கு முன் புதுச்சேரி சென்றிருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி பொதுமக்களிடையே உரையாடினார். அப்போது நாராயணசாமி மீது மீனவப்பெண் குற்றம்சாட்டியதை மைக் முன்னாள் நின்றே பொய்யை அடுக்கி மாற்றிப்பேசினார் நாராயணசாமி. இவர் மாற்றிப்பேசியதை நாடே விமர்சித்தது. காங்கிரஸ் என்றால் இப்படித்தான் பொய் சொல்வார்களா? என்கிற சந்தேகத்தை இந்தியா முழுவதும் விதைத்தது. 

ராகுல் காந்திக்கு தமிழ் மீது ஆர்வம் இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும். சம்பந்தப்பட்ட, நேரடி குற்றச்சாட்டில் உள்ள, ஆட்சிக்கவிழ்க்கப்பட்ட ஒருவரையே மொழி பெயர்ப்பாளராக நியமித்தால் அவர் இப்படித்தானே பேசுவார். காங்கிரஸில் உள்ள வேறொரு மொழி பெயர்ப்பாளரை நியமித்து இருக்கலாமே. பொதுவெளியில் இப்படி அப்பட்டமாக மாற்றிச் சொல்பவர்கள், தனிமையில் இல்லாதபோது இன்னும் என்னென்ன சொல்லி ஏமாற்றுவார்கள்? இதனால் தான் காங்கிரஸ் கட்சி அழிவை நோக்கிச் செல்கிறது. அதே நேரத்தில் தமிழை கற்றுக்கொண்டு இங்கு காலூன்ற நினைக்கிறது பாஜக என கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இன்று புதுச்சேரியில் பேசிய மோடி, ‘’கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, மாணவர்களுக்கு கல்விதான் சிறந்த செல்வம்’’எனக் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சியிலோ கேட்கவும் ஆளில்லை. கேட்டு உண்மையான பொருட்கூற உண்மையானவர்கள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்து வெகு நாட்களாகி விட்டது. 


   

click me!