நாளையும் பேருந்துகள் ஓடாது.. இனி போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.. தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Feb 25, 2021, 3:01 PM IST
Highlights

அரசு பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். 

அரசு பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். 

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

ஆனால், அனைத்து ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். இல்லையெனில், சம்பளம் பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். ஆனால், எச்சரிக்கையும் மீறி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இதனால், தமிழகத்தில் 80 சதவீத பேருந்துகளும், சென்னையில் 70 சதவீத பேருந்துகளும் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அரசு பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும். கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் வேலைநிறுத்தம் தொடரும் என்றார். அரசு அறிவித்த ரூ.1,000 இடைக்கால நிவாரணம் ஏற்கக் கூடியதாக இல்லை. ஆகையால், தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தீவிரப்படுத்தபடும். அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

click me!