ஒரே கேள்வியில் ஸ்மிருதி இரானியை வாயடைக்க வைத்த ராகுல்: மக்கள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் மோடி என தாக்கு.

By Ezhilarasan BabuFirst Published Oct 8, 2020, 11:01 AM IST
Highlights

இந்நிலையில் ராகுல்காந்தி ட்ராக்டரில் பயணித்தபோது அவர் அமருவதற்கு வசதியாக அதில் ஷோபா பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் பாஜகவினர் அதை விமர்சித்து வருகின்றனர்.

நான் டிராக்டரில் சோபா போட்டு அமர்ந்ததை விமர்சித்த பாஜக தலைவர்கள், பிரதமரின் சொகுசு  விமானத்தை கண்டுகொள்ளாதது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டிராக்டரில் சோபாவை போட்டு அமர்ந்து சென்றார். இதை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து கேலி, கிண்டல் செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு  கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். 

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது, குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேளாண் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறார். இச்சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகளும் தொழிலாளர்களும் கார்ப்பரேட்டுகளின் அடிமைகளாக மாற்றப்படுவார்கள். என்று கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் குருஷேத்ரா மாவட்டத்தில், பெஹோவாவில்  தனது கெட்டி பச்சாவ்  யாத்திரையில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இந்நிலையில் ராகுல்காந்தி ட்ராக்டரில் பயணித்தபோது அவர் அமருவதற்கு வசதியாக அதில் ஷோபா பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் பாஜகவினர் அதை விமர்சித்து வருகின்றனர். 

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் அமைச்சருமான ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் ராகுல்காந்தியை கிண்டல் செய்துள்ளனர். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ராகுல்காந்தி நேற்று கூறியதாவது, என் நலம் விரும்பிகளில் யாரோ ஒருவர், டிராக்டரில் சோபாவை போட்டுள்ளார். பிரதமர் மோடியின் பயன்பாட்டுக்காக மக்கள் வரிப்பணம் ரூபாய் 8000 கோடிக்கு புதிய ஏர் இந்தியா-1 விமானம் வாங்கப்பட்டுள்ளது. அதில் ஷோபா மட்டுமின்றி பிரதமரின் வசதிக்காக சொகுசு படுக்கைகளும் உள்ளன. அதையெல்லாம் ஏன் யாரும் பார்க்கவில்லை. தன்னுடைய நண்பர் ட்ரம்ப் அதேபோன்று விமான நிலையத்தை வைத்திருப்பதால் மோடியும் கோடிக்கணக்கான ரூபாயை வீணடித்து இந்த விமானத்தை வாங்கி உள்ளாரே என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

click me!