நள்ளிரவில் டெல்லியை நடுங்க வைத்த ராகுல் காந்தி….மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்….

 
Published : Apr 13, 2018, 06:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
நள்ளிரவில் டெல்லியை நடுங்க வைத்த ராகுல் காந்தி….மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்….

சுருக்கம்

Rahul protest in delhi for the rape and murder of Ashifa

கத்துவா மற்றும் உனா பகுதிகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களை  கண்டித்து டெல்லி இந்தியா கேட் அருகே ராகுல் காந்தி நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜம்மு ஜாஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ளவரை விடுவிக்க கோரி அம்மாநில பாஜக அமைச்சர்கள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போல உத்தரப்பிரதேசம் உனா நகரில் பாஜக எம்எல்ஏ  மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார்.



இந்த சம்பவங்களை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.



இந்த பேரணியில் பிரியங்கா வதேரா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

தூங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசை தட்டி  எழுப்பவே நள்ளிரவில் போராட்டம் நடத்தியதாக இதில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி