மு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பது ராகுலின் கனவு.. திமுகவை மகிழ்ச்சி கடலில் தள்ளிய காங்கிரஸ் பொறுப்பாளர்

By Asianet TamilFirst Published Sep 24, 2020, 9:05 PM IST
Highlights

மு.க.ஸ்டாலினை அடுத்த முதல்வராக வேண்டும் என்ற ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில், வரும் தேர்தலை திமுகவுடன் காங்கிரஸ் இணைந்து சந்திக்கும் என்று அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்ட பிறகு அவர், முதன் முறையாக சென்னைக்கு வருகை தந்தார். பின்னர் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். அதில் “2021ம் ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று ஆட்சி அமைக்க தமிழக காங்கிரஸ் பாடுபடும். கடந்த 2019-ல் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார்.
அதேபோல நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலாக மு.க.ஸ்டாலின் அறிவித்ததை நாங்கள் நன்றி உணர்வுடன் நினைவில் வைத்துள்ளோம். இந்த அறிவிப்பால் கவரப்பட்ட தமிழக மக்கள், மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில், 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை அமோகமாக வெற்றி பெறச் செய்தார்கள்.
அதேபோன்று, மு.க.ஸ்டாலினை அடுத்த முதல்வராக வேண்டும் என்ற ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில், வரும் தேர்தலை திமுகவுடன் காங்கிரஸ் இணைந்து சந்திக்கும். 2021ம் ஆண்டு நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை இதுதான் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

click me!