இந்திய அரசியலின் அரசியல் குக்கூ ராகுல் காந்தி... பாஜக கடும் விமர்சனம்..!

Published : Sep 07, 2021, 12:25 PM IST
இந்திய அரசியலின் அரசியல் குக்கூ ராகுல் காந்தி... பாஜக கடும் விமர்சனம்..!

சுருக்கம்

இந்திய அரசியலின் அரசியல் குக்கூ காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது அரசியல் ஆதாயத்துக்காக அடுத்தவர்களின் தோள்கள் மீது ஏறி சவாரி செய்து வருகிறார் என, பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா விமர்சித்துள்ளார்.   

இதுகுறித்து அவர், ‘’'குக்கூ' என்ற பறவை, சொந்தமாக கூடு கட்டாது. மற்ற பறவைகளின் கூடுகளை பயன்படுத்திக்கொள்ளும். ராகுலும் அப்படித்தான் செயல்படுகிறார். அவர் தனது சொந்த கட்சிக்காக வேலை செய்வது இல்லை. களத்தில் இறங்கி கடுமையாக பாடுபடுவது இல்லை. தனது அரசியல் ஆதாயத்துக்காக அடுத்தவர்களின் தோள்களில் ஏறி சவாரி செய்து வருகிறார். அதனால் அவர் 'இந்திய அரசியலின் அரசியல் குக்கூ' என, அழைக்கப்படுகிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் இல்லை. கள பிரச்னைகளை எழுப்ப முடியாத நிலையில் உள்ளது. அதனால்தான், அதன் இடைக்கால தலைவரான சோனியா, மற்ற கட்சிகளின் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். ராகுலோ முசாபர்நகரில் நடந்த விவசாயிகள் மாநாடு பற்றி குறிப்பிடுவதற்காக, பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு குழப்பத்தையும், பொய்யையும் பரப்பி வருகிறார்’’என  கடுமையாக விமர்சித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!