தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏத்துறது தான் அவரோட வேலை... பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Mar 30, 2022, 03:13 PM IST
தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏத்துறது தான் அவரோட வேலை... பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி..!

சுருக்கம்

பிரதமிரன் தனசரி to-do லிஸ்ட் - பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எப்படி உயர்த்துவது தான் என ராகுல் காந்தி டுவிட் செய்து இருக்கிறார். 

பிரதமர் நரேந்திர மோடியின் தினசரி வேலையே இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றுவது, விவசாயிகள் நிலையை மேலும் மோசமாக்குவது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை மேலும் இருட்டடிப்பு செய்வது மட்டும் தான் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார். 

இந்தியாவில் சுமார் நான்கறை மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் மார்ச் 22 ஆம் தேதி முதல் இதுவரை சுமார் ஒன்பது முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 பைசா வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு விலையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்தி டுவிட்:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "பிரதமிரன் தனசரி to-do லிஸ்ட் - பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எப்படி உயர்த்துவது, மக்கள் செலவீனங்கள் பற்றிய விவாதத்தை எப்படி நிறுத்துவது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை எப்படி இருட்டடிப்பு செய்வது, எந்த பொதுத்துறை நிறுவனத்தை விற்பது, விவசாயிகள் நிலையை எப்படி மேலும் மோசமாக்குவது," என குறிப்பிட்டு இருக்கிறார். 

இவரின் டுவிட்டர் பதிவு முழுக்க முழுக்க இந்தி மொழியில் இடம்பெற்று இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் பதிவுடன் சேர்த்து "RozSubahKiBaat" எனும் ஹேஷ்டேக்கையும் இணைத்து இருந்தார். ஒற்றை டுவிட் மூலம் நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகளை பிரதமர் சரிவர கவனிப்பதில்லை என ராகுல் காந்தி வெளிப்படையாக குற்றம் சாட்டி இருக்கிறார். 

பொது வேலை நிறுத்த போராட்டம்:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை எதிர்த்து பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதிலும் இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யு.சி. போன்ற தொழிற் சங்கங்களும் தி.மு.க., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தங்களின் ஆதரவை தெரிவித்தன. 

இதுதவிர தேசிய வங்கி நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பெரும்பாலான வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுக்க இரண்டு நாட்கள் நடைபெற்ற பொது வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பல கோடி ரூபாய் வரையிலான இழப்பு ஏற்பட்டது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!