காங். கட்சிக்கு ராகுல் காந்தி தான் தலைவராக வேண்டும்... கே.எஸ்.அழகிரி பரபரப்பு கருத்து!!

By Narendran SFirst Published Mar 21, 2022, 3:19 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தியை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தியை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். உ.பி, உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த வாக்குப் பதிவு கடந்த 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் ஐந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. உ.பி. உட்பட 5 மாநிலங்களில் நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 5 மாநில தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

Latest Videos

இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியினரை ஏமாற்றமடைய செய்தது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராகத் தொடர்வார் என முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தியை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக விச்சு லெனின் பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலுள்ள கோடான கோடி காங்கிரஸ் தொண்டர்கள் அன்னை சோனியா காந்தியை தான் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு கூட்டு தலைமை தேவையில்லை ராகுல் காந்தி தான் தலைவராக வேண்டும். மோடியுடன் சமரம் பேச தான் ஆட்கள் உள்ளனர். எதிர்க்கும் ஆற்றல் ராகுல்காந்திக்கு மட்டுமே உள்ளது. ராகுல் காந்தியை தான் தலைவராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அனுப்பவும் தமிழ்நாடு காங்கிரஸ் தயாராக உள்ளது. 7 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லை என்றால் காங்கிரஸ் அழிந்து விடுமா? நிச்சயமாக இல்லை படிப்பினைகளை கற்றுக்கொண்டு தவறுகளை சரிசெய்து கடின உழைப்பின் மூலம் மீண்டும் வருவோம். மேகதாதுவில் அணை கட்டுவது காவேரி ஒப்பந்தத்திற்கு எதிரானது. அங்கு உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்தாலும் தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று தெரிவித்தார். 

click me!