China Plane Crash: 2 நிமிடத்தில் 30 ஆயிரம் அடி கீழே வந்து விழுந்த விமானம்.. 133 பேர் கதி என்ன.?? கதறும் சீனா.

By Ezhilarasan Babu  |  First Published Mar 21, 2022, 3:16 PM IST

இது பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானம் போயிங் 737 மாடல் விமானம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரக விமானங்கள் கடந்த காலங்களில் பலமுறை விபத்துக்குள்ளாகி இருக்கிறது. விமானம் ஆறரை ஆண்டுகளாக ஏர்லைன்ஸில் இருந்தது, சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் படி MU-5735 விமானம் குன்மிங் சாங்ஷூய்  விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:15 மணிக்கு புறப்பட்டது. 


விபத்துக்குள்ளான விமானம்  இரண்டே நிமிடத்தில் 133 பயணிகளுடன் 30 ஆயிரம் அடிக்கு கீழே வந்து  விழுந்துள்ளது. விமானம் விழுந்த உடனேயே குவாங்சி மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை விமானத்தில் இருந்தவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதில் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து  விழுந்த விமானம்:

Tap to resize

Latest Videos

சீனாவில் திங்கட்கிழமை மதியம் பெரும் விமான விபத்து ஏற்பட்டது.  133 பயணிகளுடன் சென்ற சீன ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் குவாங்சியில்  விபத்துக்குள்ளானது. இந்த விமானம் விபத்துக்குள்ளான மழையின் சில படங்கள் வெளியாகியுள்ளது. அந்த மலையில் இருந்து கரும்புகை எழுகிறது, இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் வெறும் இரண்டே நிமிடங்களில் விமானம் 30,000 அடி உயரத்திற்கு கீழே விழுந்ததாக விமான மதிப்பாய்வுகள் கூறுகின்றன. இந்த விபத்தின் படங்களை பார்க்கும்போது பல பயணிகள் உயிரிழந்திருக்கக்கூடும் என அனுமானிக்க முடிகிறது.

இது பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானம் போயிங் 737 மாடல் விமானம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரக விமானங்கள் கடந்த காலங்களில் பலமுறை விபத்துக்குள்ளாகி இருக்கிறது. விமானம் ஆறரை ஆண்டுகளாக ஏர்லைன்ஸில் இருந்தது, சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் படி MU-5735 விமானம் குன்மிங் சாங்ஷூய்  விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:15 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் பிற்பகல் 3 மணிக்கு குவாங்சோவை சென்றடைய இருந்தது. விபத்தில் சிக்கிய போயிங் விமானம் ஆறரை ஆண்டுகளாக பயணிகள் சேவையில் இயங்கிவந்தது. இந்த விபத்து குறித்து சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்  இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

உலகின் மிகப்பெரிய விமான விபத்து:

உலகின் மிகப்பெரிய விமான விபத்து கடந்த ஆண்டு நடந்தது. 2021ஆம் ஆண்டில் உலகெங்கிலுமுள்ள விமான நிறுவனங்களில் 15 அபாயகரமான விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் மொத்தம் 134 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாதங்களில் நடந்த மிகப்பெரிய விபத்து ஸ்ரீ விஜயா ஏர்போயிங் 737-500  இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது.  ஜனவரி 9-2021 அன்று நடந்த விபத்தில் விமானத்திலிருந்த 61 பேரும் உயிரிழந்தனர். அந்த வகையில்  தற்போது நடந்திருப்பது மிகப்பெரிய விமான விபத்தாக கருதப்படுகிறது. 
 

click me!