ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய பர்ஷனல் போட்டோ... இந்த ரணகத்திலும் ஒரு குதுகலம் கேக்குதுல்ல!

By vinoth kumarFirst Published Dec 20, 2018, 3:50 PM IST
Highlights

தன் பெயரை வைத்து நடக்கும் இந்த பரபரப்புகளை எட்டி நின்று ரசிக்கும் ராகுல்காந்தி, தன் பெயரை முன்மொழிந்ததற்காக ஸ்டாலினுக்கு போன் போட்டு ஸ்பெஷல் நன்றியை சொல்லியிருக்கிறார். கூடவே, விழாவில் கருணாநிதியின் சிலையை தன் மொபைலில் எடுத்த போட்டோவை ஸ்டாலினுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

ஆரம்பமே அதிரிபுதிரியாய் அமைந்திருக்கிறது ஸ்டாலின் - ராகுல் நட்பில்! அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பதற்காக டெல்லியில் சோனியா மற்றும் ராகுலை சந்தித்தார் ஸ்டாலின். அன்று முதல் ராகுல் மற்றும் ஸ்டாலின் இடையே திடீரென ஒரு நட்பு பூ பூத்தது. 

அதன் பின், டெல்லியில் கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம், சென்னை தி.மு.க. விழா, ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் பதவியேற்பு விழா என்று தொடந்து இரு தலைவர்களும் நெருங்கிய நட்பில் இருக்கின்றனர். இது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் என இரண்டு தரப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் ஆச்சரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ’ராகுல் காந்தியே வருக, இந்த நாட்டுக்கு நல்லாட்சி தருக!’ என்று அவரை மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் ஸ்டாலின். இந்த அதிரடியானது அக்கூட்டணிக்குள் பெரும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. ’இது ஸ்டாலினின் தனிப்பட்ட விருப்பம்!’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் யெச்சூரி முதல் விக்கெட் எடுத்தார், அடுத்து ‘பிரதமர் வேட்பாளர் குறித்து கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் பேசிதான் முடிவெடுக்க வேண்டும். அது தேர்தலுக்கு பிறகுதான் முடிவு செய்யப்படும்.’ என்று மம்தா மிரள விட்டிருக்கிறார். அகிலேஷ் யாதவோ ‘பிரதமர் வேட்பாளர் குறித்து ஒருவர் கூறியது கூட்டணியின் ஒட்டுமொத்த கருத்து ஆகாது. அவரது கருத்தை அனைவரும் ஏற்கவேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது. 

தற்போதைய நிலையில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம். தேர்தலுக்குப் பின்பே அது குறித்து முடிவு செய்யப்படும்.” என்று கூறியிருக்கிறார். ஆக ராகுலை குளிர்விக்கவும், இந்த கூட்டணி வென்று ராகுல் பிரதமராக அமர்ந்தால் தி.மு.க.வுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்கிற நோக்கிலும் ஸ்டாலின் இந்த பஜனையை துவக்கினார். ஆனால் அது கூட்டணிக்குள் பெரும் குழப்பங்களை உருவாக்கியுள்ளது. இது ஸ்டாலினுக்கு ஒரு வகையில் வருத்தம்தான் என்றாலும் கூட, தேசிய அளவில் தி.மு.க.வை டிரெண்ட் செய்ததாக பெருமையும் பட்டுக் கொள்கிறார்.

 

 இந்நிலையில், தன் பெயரை வைத்து நடக்கும் இந்த பரபரப்புகளை எட்டி நின்று ரசிக்கும் ராகுல்காந்தி, தன் பெயரை முன்மொழிந்ததற்காக ஸ்டாலினுக்கு போன் போட்டு ஸ்பெஷல் நன்றியை சொல்லியிருக்கிறார். கூடவே, விழாவில் கருணாநிதியின் சிலையை தன் மொபைலில் எடுத்த போட்டோவை ஸ்டாலினுக்கு அனுப்பிவைத்துள்ளார். அதற்கு இவரும் நட்பு மிளிர சில வார்த்தைகளை போட்டு நன்றி சொல்லியுள்ளார். ராகுல் காந்தி தன்னுடன் மொபைல் சாட்டிங்கில் இருப்பதை தன் நெருங்கிய நபர்களிடம் ஸ்டாலின் சொல்ல, அவர்களோ இதை பெருமையாக ஊர் முழுக்க டமாரமடிக்க துவங்கியுள்ளனர். இந்த ரணகளத்திலும் ஒரு குதுகலம்!

click me!