ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், முன்னாள் தேர்தல் ஆணையர் தொலைபேசிகள் ஒட்டு கேட்பு.. பூதாகரமாகும் பெகாசஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jul 20, 2021, 10:20 AM IST
Highlights

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உலகில் உள்ள நாடுகளின் அரசாங்கங்கள் மட்டுமே இருந்து வருகின்றன எனபது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ்  என்ற உளவு மென்பொருள் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, சமீபத்தில் நியமிக்கப்பட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஜல்சக்தி அமைச்சர் பிரகலாத் படேல், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மற்றும் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் கண்காணிக்க பட்டதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது இந்திய அரசியல் களத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவின் மொத்தம் ஆயிரம் தொலைபேசி எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும்  அதில் தற்போது வரை 300 எண்கள்   உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

இஸ்ரேலின் என்எஸ்ஓ என்ற கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் மூலம் இந்தியாவில் மட்டும் 300 தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டு உள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெகாசஸ் ஸ்பைவேர் என்ற உளவு பார்க்கும் மென்பொருள்களை பயன்படுத்தி உலகம் முழுவதும் 37 தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்பட்டுள்ளன. இதில் 10 இந்தியர்களின் தொலைபேசிகளும் அடங்கும், எனவே இந்தியாவில் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்ட உளவு பார்க்கப்பட்டது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் பத்து நாடுகளில் 1571 முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டு முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 300 தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல முக்கிய அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கை யாளர்கள், நீதித்துறை, தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களும் அடங்கும். 

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உலகில் உள்ள நாடுகளின் அரசாங்கங்கள் மட்டுமே இருந்து வருகின்றன எனபது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, சமீபத்தில் ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்ட  அஸ்வின் வைஷ்ணவ் மற்றும் ஜல்சக்தி அமைச்சர் பிரகலாத் படேல், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மற்றும் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இதில் குறி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல்  காந்தியின் இரண்டு தொலைபேசி எண்களும் உளவு பார்க்கப் பட்டுள்ளன மற்றும் அவரது உதவியாளர்கள் நண்பர்கள் பயன்படுத்திய எண்களும் உளவுபார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான நடுப்பகுதியில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் சந்தேகத்திற்கிடமான இலக்குகளில் பட்டியலில் லாவா சாவின் தொலைபேசி எண் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய மத்திய அமைச்சர் வைஷ்ணவம் 2017ஆம் ஆண்டில் கண்காணிக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது மனைவியின் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

அதேபோல் விஎச்பி செயற்பாட்டாளர் பிரவீன் தொகாடியா 2018ல் குறி வைக்கப்பட்டுள்ளார், பாஜக செயற்பாட்டாளர்கள் சிலரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இந்த ஆண்டில் மேற்குவங்க தேர்தலின் போது பிரசாந்த் கிஷோரின் தொலைபேசி மற்றும் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் பாராளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜியின் தொலைபேசிகளும் ஓட்டு கேட்க பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்ட சட்டமன்ற தேர்தலில் கடைசி கட்ட வாக்குப் பதிவுக்கு ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 28 அன்று கிஷோரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதற்கான தடையங்களை  ஆம்னஸ்டியின் தடயவியல் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் தலைமை நீதியரசர் ரஞ்சன் கோகாய், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்ட உயர் நீதிமன்ற ஊழியர் ஒருவரும் குறி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

click me!