அடி தூள்.. கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திய 5 முக்கிய நகரங்களில் சென்னை முதலிடம்..

By Ezhilarasan BabuFirst Published Jul 20, 2021, 8:01 AM IST
Highlights

மேலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம் மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் என 5 பெருநகரங்களில், அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நகரம் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில்

கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திய 5 முக்கிய நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள 5 பெரிய நகரங்களில், சென்னையில் அதிகமானோருக்கு 2ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம் மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் என 5 பெருநகரங்களில், அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நகரம் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், சென்னையில் இரண்டு தவணை தடுப்பூசிகளும் அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளதாக  ஆய்வில் தெரியவந்துள்ளது.சென்னையில் 11% நபர்கள் 2ம் தவணை செலுத்தி உள்ளதாகவும், அடுத்தபடியாக பெங்களூரில் 10%, டெல்லி மும்பை ஆகிய நகரங்களில் தலா 7% மற்றும் ஹைதராபாத்தில் 5% பொதுமக்களும் தடுப்பூசி செலுத்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு அதிகபட்சமாக பெங்களூரில் 64%  சென்னையில் 43%,  ஐதராபாத்தில் 37% மும்பையில் 33% பொதுமக்களுக்கு தடுப்பபூசி செலுத்தப்பட்டு உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 45 வயது மேற்பட்டோரில் பெங்களூரில் 91% நபர்களுக்கும்,  சென்னையில் 85%, மும்பையில் 70%, டெல்லியில் 59%, ஹைதராபாத்தில் 48% பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!