அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்.. வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை..!

Published : Jul 20, 2021, 08:01 AM ISTUpdated : Jul 20, 2021, 11:18 AM IST
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்.. வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று  வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று  வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வயது மூப்பு காரணமாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பி ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் மதுசூதனனின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நீண்டகாலம் கட்சியின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

100 நாள் வேலையில் முதலில் காந்தி பெயரையே வைக்கவில்லை.. தனி உலகில் வாழும் ஸ்டாலின்.. அண்ணாமலை அட்டாக்!
இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!