ராகுல் காந்தி திருமணம் செய்ய விரும்பிய பிரபல நடிகை !! அம்பலமான ரகசியம் !!

Published : Oct 03, 2018, 06:27 AM ISTUpdated : Oct 03, 2018, 06:29 AM IST
ராகுல் காந்தி திருமணம் செய்ய விரும்பிய பிரபல நடிகை !! அம்பலமான ரகசியம் !!

சுருக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொள்ள விருப்பியதாகவும், கரீனா கபூரும் ராகுலுடன் டேட்டிங் செய்ய மிகுந்த ஆவலுடன் இருந்ததாகவும் சோனியா மற்றும்  கரீனா கபூர் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பராக இருந்தவரும், பிரபல பத்திரிகையாளருமான ரஷீத் கித்வாய் தனது புத்தகம் குறிப்பிட்டுள்ளார்

பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தையும் உள்ளது. ஆனால், சயீப் அலிகான் மீது காதல் வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கரீனா கபூர் விரும்பி உள்ளார். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் தெரிவித்துள்ளார்.

இரு குடும்பங்களைப் பற்றியும் தான் எழுதிய புத்தகத்தில் அவர் இதை தெரிவித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டுவாக்கில், இரு குடும்பங்களும் நெருங்கி பழகி வந்துள்ளன. அப்போது, ராகுல் காந்தி, எம்.பி. ஆகவில்லை. அவர் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்திய கரீனா கபூர், ராகுலுடன் ஊர் சுற்ற ஆர்வமாக இருப்பதாக கூறினார்.

அதுபோல், ராகுல் காந்தியும் நடிகை கரீனா கபூர் நடித்த படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டினார். முதல் நாளிலேயே அந்த படங்களை பார்த்து விடுவார் என்று அந்த பத்திரிகையாளர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.


ஆனால், இந்த தகவல்களை நடிகை கரீனா கபூர் தற்போது மறுத்துள்ளார். அவை அனைத்தும் இரு குடும்பங்களும் நெருக்கமாக பழகிய கடந்த கால நிகழ்வுகள் என்று அவர் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!