பாஜக என்ன நினைக்குதோ அதைத்தான் பிரக்யா தாகூர் சொல்கிறார் !! அதிர வைத்த ராகுல் !!

Published : Nov 28, 2019, 11:31 PM IST
பாஜக என்ன நினைக்குதோ அதைத்தான் பிரக்யா தாகூர் சொல்கிறார் !! அதிர வைத்த ராகுல் !!

சுருக்கம்

கோட்சே ஒரு தேசபக்தன் என பாஜகவின் மனது மற்றும் ஆன்மாவில் இருக்கும் கருத்தைத்தான் பிரக்யா தாகூர் வெளிப்படையாக கூறியுள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய தி.மு.க உறுப்பினர் ஆ. ராசா, 'நாதுராம் கோட்சே அவர் கொண்டிருந்த சித்தாந்தத்தின் காரணமாக மகாத்மா காந்தியின் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்தார். அதனால்தான் அவரைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்' என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர், 'தேசபக்தரை நீங்கள் உதாரணமாக குறிப்பிடக்கூடாது' என்று பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காந்தியை கொன்ற கோட்சேவை தேசபக்தன் என கூறியதற்கு பிரக்யா தாகூர் மன்னிப்பு கேட்க வேண்டுமென கோரிக்கைகளும் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், பிரக்யா தாகூரின் சர்ச்சை கருத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து  பேசிய அவர்,  'பயங்கரவாதி பிரக்யா தாகூர் மற்றொரு பயங்கரவாதி கோட்சேவை தேசபக்தன் என கூறியுள்ளார். இது இந்திய பாரளுமன்ற வரலாற்றில் மிகவும் மோசமான நாள் என குறிப்பிட்டுள்ளார்.. 

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இதயம் மற்றும் ஆன்மாவில் இருக்கும் கருத்தைத்தான் பிரக்யா தாகூர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். எவ்வளவுதான் மறைக்க நினைத்தாலும், மகாத்மா காந்தியை எவ்வளவு வணங்கினாலும் கோட்சே ஒரு தேசபக்தன் என்ற கருத்துத்தான் பாஜகவின் ஆன்மாவாக உள்ளது. இந்த உண்மை எப்படியும் வெளிவந்துவிடும்' என்று ராகுல் அதிரடியாக தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்